ஓட்டு போட போறோம்!!

ஹலோ ஓட்டு போடறதுக்கு ரெடி ஆகிட்டீங்களா? கொஞ்சம் இதை படியுங்களேன். அதுக்கு முன்னாடி இந்த ஒரு வரிக் கதையை படிங்க...
பசியால் வாடுபவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது விவேகமானது.
படிச்சுட்டீங்கள... இப்ப மேல படிங்க! சாரி கீழ படிங்க...!!
நம்ம அரசியல்வாதிங்க இலவசமா எத்தனை பொருள் கொடுத்தாலும் அது நம்ம வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவுமா?
இலவசமா தொலைகாட்சி, நிலம் இப்படி நிறைய கொடுக்கிறதை விட, தானே சுயமா சம்பாதிச்சு வாங்குறதுல தாங்க திருப்தி இருக்கு.
சுயமா சம்பாதிக்கறதுக்கு ஏத்த மாதிரி அரசு நல்ல நல்ல திட்டங்களை அறிவிச்சு தொழில் கூடங்களை ஆரம்பிச்சு வேலை வாய்ப்பை பெருக்கி ஜனங்களுக்கு வேலை கொடுத்து அவங்க கையிலே பணப்புழக்கத்தை கொடுத்தா அவங்களே வாங்கிக்குவாங்க . அது மாதிரி நம்ம மனசை நாம மாத்திக்கணும். இது நடக்குமா?
அரசியல்வாதிகளும் மாறுவாங்களா?