காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூர், உண்மையில் திருப்புத்தூர் என்றே அழைக்கப்பட வேண்டும். காரைக்குடிக்கும் சிவகங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது திருப்ப(பு)த்தூர். இராமாயாணம் எழுதிய வால்மீகி முனிவர் இத் திருப்பத்தூரில் சில காலம் தவம் செய்தாராம். வால்மீகி தவம் இருந்ததால் ஏற்பட்ட புற்று காரணமாகவே திருப்புத்தூர் (திரு+புத்து+ஊர்) என ஆனது என்றும் கூறுவர். வட மொழியில் இராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு தமிழர் தான் என்று இதன் மூலம் தெரிகிறது. ஆதாரம்: முனைவர் சு. செளந்தரபாண்டியன் எழுதிய "புராணங்கள் எனும் செல்வங்கள்" என்ற நூலிலிருந்து...
இன்றைய தமிழ் செய்திகள்!
கரண்ட் மொழி!
"கண்ணா... நான் எப்படி வருவேன் எப்ப வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரைக்டா வர மாட்டேன்!" (ஹி ஹி ... ரஜினி வசனத்தை கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்கோம்)
Mini News... Australia!
ஆஸ்திரேலியா 1606 ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த வில்லியம் சான்ஸ் என்பவர் தங்கம் மற்றும் மசாலா பொருட்கள் கிடைக்குமா என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். 1800 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் தங்கம் கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் பலர் அங்கு குடியேற ஆரம்பித்தனர். 1901 ஆஸ்திரேலிய காமன்வெல்த் அமைக்கப்பட்டது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிய ஐரோப்பியர்களால் மிக உயர்தரமான வாழ்க்கை முறை அங்கு இருந்து வருகிறது. ஐரோப்பிய மற்றும் ஆசியாவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.ஆஸ்திரேலியாவில் வருடம் முழுவதும் ஒரே மாதிரியாக இனிய தட்பவெப்பம் நிலவுகிறது. எனவே சுற்றுலா செல்பவர்கள் எல்லா கால நிலையிலும் செல்கிறார்கள். குளிர்காலத்திலும் இங்கு சூரிய குளியல் இருப்பார்கள்.ஆஸ்திரேலிய மக்கள் என்று பார்த்தால் ஆஸ்திரேலியர்கள் குறைவு. ஐரோப்பியர்கள் அதிகமாக உள்ளனர். உணவு வகைகளில் 90 சதவீதம் பேர் மாமிச உணவு சாப்பிடுவார்கள். மட்டன் அவகளுக்கு தேவயான அளவு கிடைப்பதுடன் வளைகுடா நாஉகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள்.ஆஸ்திரேலியாவில் தமிழர்கள், சீக்கியர்கள், குஜராத்தியர்கள், போன்ற பல மாநில இந்தியர்கள் அதிக அளவு உள்ளனர்.
Mini News... Italy!
சிறு துளி... இத்தாலி! ரோம் நகரை தலைநகராக கொண்ட ஒரு தீபகற்பம், இத்தாலி! இதன் மொத்த பரப்பளவு 301,225 சதுர கிலோ மீட்டர்கள். இத்தாலி EEC எனப்படும் ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தில் அங்கம் வகிக்கிறது. பழங்காலம் முதல் தமிழர்களுக்கு ரோமாபுரியுடன் வியாபார தொடர்புகள் இருந்து வந்ததை இலக்கிய சான்றுகள் நிரூபிக்கின்றது. மிலன், நேப்பில்ஸ், டூரின், ஜெனோவா, வெனிஸ், பிளாரன்ஸ் முக்கிய நகரங்கள்.இத்தாலிய மொழி; 99 சதவீதம் ரோமன் கத்தோலிக் மதம்.பேருந்து, ரயில், விமான போக்குவரத்துடன் நீர்வழி போக்குவரத்தும் இங்கு பிரசித்தம். நீரில் செல்லும் வாடகை படகுகளுக்கு வாடகை மிக அதிகம். ரயில் போக்குவரத்து சிக்கனமானது.