உங்களிடம் செல்போன் உள்ளதா?... கவனம்!


ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள்ல, இ மெயில்ல, மருத்துவ வார/மாத இதழ்கள்லன்னு எங்கே பார்த்தாலும் செல்ஃபோன் பயன்படுத்தினா மூளைப்புற்றுநோய் வருது, இடது பக்கம் வச்சி பேசினா மூளை பாதிக்கப்படாது, ரிங் போன பிறகுதான் காதுகிட்ட வைக்கனும், நம்பர் போட்ட உடனே காதுகிட்ட வச்சா 2 watts சக்தியை செல்ஃபோன் வெளியிடும் இப்படி இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் (?) பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா எது உண்மைன்னுதான் இதுவரைக்கும் தெரியல!
இதையெல்லாம் படிக்கும்போது வர்றது ஒரே கேள்விதான். ஆமா, இந்தச் செய்திகளுக்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான, ஆய்வுகளுடன் கூடிய ஆதாரங்கள் இருக்கா அப்படீங்கிறதுதான்?! மேலே சொன்ன செல்ஃபோன் குறித்த எச்சரிக்கைகள் எல்லாமே, ஒவ்வொரு செல்ஃபோனும் வெளியிடும் கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டவை.
செல்ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சுக்கும் மூன்று விதமான புற்றுநோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய சில சர்வதேச ஆய்வு முடிவுகள் எச்சரித்திருக்கின்றன! ஆனால், இவையனைத்தும் அரிதாக ஏற்படும் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது! அவை
முதுகுத் தண்டு/மூளை புற்றுநோய் (glioma)
காதருகே இருக்கும் எச்சில் சுரக்கும் பகுதியின் புற்றுநோய் (cancer of the parotid, a salivary gland near the ear)
மூளையும் காதும் இணையும் பகுதியின் புற்றுநோய் (acoustic neuroma, a tumor that essentially occurs where the ear meets the brain)
ஆனால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு (The Food and Drug Administration) செல்ஃபோன் பாதுகாப்பு குறித்து வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள், செல்ஃபோன் பயன்பாடு பாதுகாப்பானதா இல்லை ஆபத்தானதா என்று திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல போதுமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது!
எது எப்படியிருந்தாலும், நம்ம செல்ஃபோன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுதுன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுதானே. அதனால, இன்றைய பதிவுல நாம மக்கள் பயன்படுத்தும் பல்வேறு செல்ஃபோன்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவை கணக்கிட்டு, பிரபல தொலில்நுட்ப நிறுவனமான சினெட் (CNET) வெளியிட்டுள்ள பாடியலைத்தான் பார்க்கப்போறோம்…..
உங்க செல்ஃபோன் கதிர்வீச்சு எவ்வளவு?
செல்ஃபோனிலிருந்து வெளியாகி நம் உடல் உள்வாங்கிக்கொள்ளும், கதிர்வீச்சு எவ்வளவு என்பதை கணக்கிடுவதற்க்கு ஆங்கிலத்தில் specific absorption rate/SAR என்று பெயர்.( CNET நிறுவன அறிக்கையின் படி).
சர்வதேச செல்ஃபோன் தரத்தேர்வில் (F.C.C) தேர்ச்சி பெற்று, விற்பனைக்கான தரச்சான்றிதழ் பெற, ஒவ்வொரு செல்ஃபோனும் பெற்றிருக்கவேண்டியஅதிகபட்ச SAR அளவு 1.6 வாட்ஸ்/கிலோகிராம் (watts per kilogram). ஆனால் இந்த அளவு, ஐரோப்பாவில் 2 வாட்ஸ்/கிலோகிராம், கனடாவில் 1.6 வாட்ஸ்/கிலோகிராம். கீழே உள்ள SAR அளவுகள், செல்ஃபோனை காதருகில் வைத்து F.C.C-யால் கணக்கிட்டவை என்பதை கவனத்தில் கொள்க!
இந்த SAR அளவுகள், வெவ்வேறு அலைவரிசை மற்றும் கணக்கிடும் நிறுவனங்களைப் பொறுத்து வெவ்வேறு முடிவுகளை தரக்கூடியது என்பதையும், ஒரு செல்ஃபோனின் வெவ்வேறு மாடல்களைப் பொறுத்தும் மாறக்கூடியவை என்பதையும் நினைவில் கொள்க!
இனி, எந்தெந்த செல்ஃபோன் எவ்வளவு SAR அளவு/கதிர்வீச்சினை வெளியிடுகிறது என்று பார்ப்போம்…..
மோட்டோரோலாதான் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. மோட்டோரோலாவின் V195s என்னும் செல்ஃபோன் வெளியிடும் SAR அளவு 1.6 W/kg.
ப்ளாக்பெர்ரியின் பிரபல BlackBerry Curve 8330 வெளியிடும் SAR அளவு 1.54 W/kg
எல்.ஜீயின் LG KG800 வகை செல்ஃபோன் 0.135 W/kg மற்றும் மோட்டோரோலாவின் Motorola Razr V3x வகை செல்ஃபோன் 0.14 W/kg அளவு SAR/கதிர்வீச்சினை வெளியிட்டு, மிகவும் குறைந்தபட்ச SAR வெளியிடும் செல்ஃபோன் இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!
SAR அளவு பட்டியலில் மிகவும் அதிக அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
மிகவும் குறைந்த SAR அளவுகளைக் கொண்ட செல்ஃபோன்களின் பட்டியலைக்காண இங்கு செல்லுங்கள்
உங்க செல்ஃபோன் இந்தப் பட்டியல்களில் இல்லையென்றால், சினெட்டின் இணையதளத்துக்குச் (இங்கு) சென்று, இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டையில் உங்களின் செல்ஃபோன் நிறுவனத்தை க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்க செல்ஃபோனின் SAR அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

1 comment: