நீங்கள் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?
ஒரு வேலையை ஆரம்பிக்கும் போது " இம்... ஆரம்பிக்கும் போதே இவ்வளவு தடங்கலா" என்று ஆரம்பித்த வேலை மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்களா? இந்த வேலை உருப்படியாக முடியாது என்று உங்கள் மனம் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறதா? அப்படியானால் இந்த கேள்வி உங்களுக்கு தான்...
"இந்த வேலை உருப்படியாக முடியாது " என்று முழுமையாக நம்பும் நீங்கள் ஏன் "இந்த வேலை முழுமையாக முடியும்" என்றோ, அல்லது "இதை நான் சரியாக தவறில்லாமல் செய்து முடிப்பேன் " என்றோ முழுமையாக நம்ப கூடாது?
நம்புவது தான் நம்புகிறீர்கள், நெகடிவ் ஆக எண்ணாமல் பாசிடிவ் ஆக எண்ணிப் பாருங்களேன். நம்புவதற்கு காசா பணமா செலவாகிட போகிறது? இன்றிலுருந்து இதை முயற்ச்சித்து பாருங்களேன்!!