சமீபத்தில் "மறைந்து போன தமிழர் பண்பாடுகள் " என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டுள்ள பல பண்பாடுகள் மூடநம்பிக்கைகளை தான் எடுத்து சொன்னது. குறிப்பிட்டு சொல்ல இரண்டு சாம்பிள் இங்கு தருகிறேன்.
அமாவசை அன்று பல் தேய்க்க கூடாது!!
கணவன் தேசாந்திரம் சென்றிருந்தால் மனைவி, கணவன் திரும்பி வரும் வரை பல் தேய்க்க கூடாது.
எப்படி? ரொம்ப காமடியாக இல்லை?
முதல் கண்டிசன் மூலம் ஒரு உண்மையை புரிந்து கொண்டோம். அதாவது, சில பேர் சொல்வார்கள்... "எனக்கு பல் தேய்த்த உடனே பலகாரம் சாப்பிட வேண்டும்" என்பார்கள். அதனால் அமாவசை விரதம் இருப்பவர்கள் பல் தேய்க்க கூடாது என்பது ஒரு வகையில் சரி. அதுவும் கூட தகப்பனாரை இழந்தவர்கள் மதியம் வரை தான் பல் தேய்க்காமல் இருக்கலாம். பிறகு இல்லை போட்டு சாப்பிட வேண்டுமே...
இரண்டாவது ரொம்ப ஓவர்! அது நடைமுறை வாழ்க்கையில் ஒத்தே வராது. கணவர் திரும்பி வரும் வரை பல் தேய்க்காமல் இருந்தால், கணவர் திரும்பி வரும் போது அவர் எப்படி மனைவி அருகே செல்வார்? நாட்ட்ரம் எடுக்காதா?!!
No comments:
Post a Comment