புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஐ ஆம் சாரி!
செப்டம்பர் பதினொன்று அமெரிக்கா அட்டாக் நடந்து சில வருடங்கள் கழிந்தாலும் ஜோக்குகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சமீபத்தில் இரண்டு ஜோக்குகள் படித்தேன். அதில் தெரியும் விஷயங்கள் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பாசனை நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஜோக் ஒன்று: அமெரிக்காவில் பென்டகன் அட்டாக் நடந்த பிறகு அதிபர் புஷுக்கு ஒரு போன் வந்தது. ரிசீவரை எடுத்து "ஹலோ" என்றார். எதிர் முனையில் பேசியவர் சீன பிரதமர்,"நான் ரொம்ப வருத்தப்படுறேன். இது ஒரு மிகப் பெரிய சோகம். பெண்டகன் அட்டாக்கில டாக்குமண்ட்ஸ் எதுவும் தொலஞ்சு போயிருந்தாலோ அல்லது எரிஞ்சு போயிருந்தாலோ வருத்தப்படாதீங்க... அதோட எல்லா காப்பிகளும் எங்ககிட்ட இருக்கு!" என்றார்.
ஜோக் இரண்டு: செப்டம்பர் பதினொன்று அன்று அன்றைய பாகிஸ்தான் அதிபர் முஷரப், அமெரிக்க அதிபர் புஷுக்கு போன் செய்தார். "என்னுடைய துக்கத்தை தெரியப்படுத்தி கொள்கிறேன். உண்மையிலேயே இது ஒரு சோகமான விஷயம். நிறைய மக்கள்... நிறைய கட்டிடங்கள்... ஐ ஆம் வெரி சாரி..."
புஷ்: கட்டிடங்கள்... மக்கள்... என்ன உளறறீங்க!
முஷரப்: ஒ... இப்ப அமெரிகாவில மணி என்ன?
புஷ்: இப்ப காலையில எட்டு மணி!
முஷரப்: ஊப்ஸ்... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து போன் செய்யிறேன்.
ட்ரோஜன் பரிசு!
சுத்தம் விருது போடும்!
இரண்டாவதாகச் சொன்ன குடல் சுத்தத்தை செயல்படுத்துவதற்கு திறந்த வெளிகளையும் சாலையோர சாக்கடைகளையும் அசுத்தப்படுத்தி சுற்றுப்புற்ச்சூழலை கெடுத்து விடுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தன் வீட்டையும் மட்டுமே சுகாதாரமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறி விடுகிறார்கள். இதனால் தான் சிக்-குன் -குனியா, காலரா போன்ற நோய்களும், கொசுக்களின் பெருக்கமும் ஏற்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் மட்டும் இதை மறக்காமல், ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து தங்கள் கிராமத்தையே சுகாதாரமாக வைத்து, அதற்கு விருது வாங்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு சபாஷ் போடுவோம்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி ஒன்றியத்தில் இருக்கும் பச்சளநாய்க்கன்ப்பட்டி கிராம மக்கள் தான் அந்த சபாஷுக்கு சொந்தக்காரர்கள். சமீபத்தில் புனேயில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற ஊராட்சிகளில் பச்சளநாய்க்கன்பட்டியும் ஒன்று.
இந்த ஊராட்சியில் உள்ள 750 வீடுகளில், 80 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதியுள்ளது. வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதால் திறந்தவெளியை யாரும் கழிப்பறையாக பயன்படுத்துவதில்லை. இதையும் மீறி யாராவது திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தினால் கையில் தண்ணீர் சொம்புடன் பையில் ஐம்பது ரூபாயும் வைத்துக்கொள்ள வேண்டும். பைன் கட்ட வேண்டுமே! இந்த வம்பு எதற்கு என்று சுகாதார கழிப்பறைக்கு சென்று விடுகிறார்கள்.
இதுமட்டுமல்ல சாகடையில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதால் இந்த கிராம மக்கள் பெரிய அளவில் நோய் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. இங்குள்ள பனிரெண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் முக்கிய பணியே சுகாதாரம் காப்பது தான். மேல்நிலை தொட்டிகள் மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து விடுகிறார்கள்.
"கிராமத்தை தூய்மையாக வைப்பது ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்று அசட்டையாக இல்லாமல், எங்கள் கிராம மக்கள் கூட்டு முயற்சி செய்து சுகாதாரத்தை கடைபிடித்ததால் இவ்விருது கிடைத்தது.. விருதுடன் தரப்பட்ட பரிசு தொகையை தூய்மையை பாதுகாக்க செலவிட முடிவு செய்துள்ளேன்" என்று ஊராட்சி தலைவி லட்சுமி கூறினார்.
இது போன்ற செய்திகளை ஊடகங்களும் சிறந்த முறையில் மற்ற கிராமத்தில் வாழும் மக்களுக்கும் சேர்ப்பித்தால் நோய் பெருக்கம் குறையும்.
நன்றி: அதிகாலை
காதல் சாட்டிங்!
- என்று டைப் செய்து யாஹூ மெஸஞ்சரில் அனுப்பினான் ராஜேஸ். முப்பது நொடியில் பதில் வந்தது.
"போட்டோ அனுப்ப விருப்பம் தான். ஆனால், பத்திரிக்கை செய்திகளில் படிக்கும் நிகழ்ச்சிகள் என்னை தயங்க வைக்கிறது!"
தனக்குள் சிரித்துக்கொண்ட ராஜேஷ், "என்ன மாதிரி நிகழ்ச்சிகள்?" என்று தட்டிக்கேட்டான்.
"பெண்ணின் முகத்தையும் ஆபாசமான படத்தையும் இணைத்து நெட்டில் உலவ விட்டு வேடிக்கை பார்ப்பதே இப்போது வாடிக்கை ஆகி விட்டது. அதனால் தான்..."
"என்னை பற்றி முழுமையாக சொல்லி இருக்கிறேன். என் பெயர் கிரி என்று உண்மையை சொல்லி இருக்கிறேன். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் திருமணமாகாதவன் என்று கூறினேன். இன்னும் உனக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா?"
"ஆனால் உங்கள் விலாசம் சரியாகச் சொல்லவில்லை. எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றும் சொல்லவில்லை. அதனால் தான் தயங்குகிறேன்."
"நீயும் தான் உன்னுடைய விலாசத்தைச் சொல்லவில்லை, மைதிலி. நீ சாட் செய்யும் வார்த்தைகளை பார்க்கும் போது, நீ ரொம்ப சாப்டாக இருப்பாய் போல் தெரிகிறது. கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவளை போலும் தெரிகிறாய்"
"நீங்கள் அனுப்பும் வர்த்தைகளை பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. உங்களிடம் சாட் செய்யும் போது ஒரு பெரிய நிம்மதியை உண்ர்கிறேன். உங்களை போன்ற பெண்களுக்கு மதிப்பு கொடுத்து பேசும் ஒரு ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதினேன். உங்களிடம் சாட் செய்யும் போது அந்த நிறைவு எனக்கு ஏற்படுகிறது."
ராஜேஷ்,'இதற்கு என்ன மாதிரியான பதில் அனுபலாம்' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது-
"ஒரு நல்ல யோசனை! இன்னும் ஒரு வாரத்தில் நான் என் குடும்பத்தாருடன் சென்னைக்கு வர வேண்டிய வேலை உள்ளது. அப்போது அங்கே நேரில் சந்த்தித்துக் கொள்ளலாம் அல்லவா?"
"வெரிகுட்! இடத்தையும் குறிப்பிட்டு விட்டால் சவுகரியம்."
"முதல் சந்திப்பு என்பதால் மைலாப்பூர் சிவன் கோவிலில் சந்த்திப்போம்."
"அடையாளம்?"
"சிவப்பு கலர் சுடிதார். ஒயிட் ஹேண்ட் பேக். நீங்கள்?"
"ஒயிட் அன் ஒயிட் ட்ரெஸ் போட்டு இருப்பேன்."
"நேரம் மாலை 5 மணி!"
மாலை ஐந்து மணி சூரியன் தன்னுடைய வெப்பத்தை குறைத்துக் கொண்டு பணியை முடிக்கும் தருவாயில் இருந்தான்.
ராஜேஷ் ஹோண்டாவை நிறுத்தி விட்டு நடந்தான். பூ வாங்கிக்கொண்டு செப்பலை கழற்றி போட்டு விட்டு கோவிலுக்குள் நுழைந்தான். கூட்டம் அதிகமில்லை.
இன்று என்ன கிழமை? புதன்கிழமை. அது தான் கூட்டமில்லை.
உட்பிரகாரத்துக்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். மைதிலி எங்கே? சிவப்பு சுடிதார் எங்கே? வெள்ளை கைப்பை எங்கே?
வெளிப்பிரகாரம் வந்தான். எங்கே அவள்? எங்கே அவள்? வந்திருப்பாளா இல்லை ஏமாற்றிவிட்டாளா? சே... சாமி கும்பிடக்கூட இல்லை. அங்கே சற்று தூரத்தில் அவள் யார்? அருணா போல் இருக்கிறாளே! அவள் எப்படி இங்கே வந்தாள்? அட... என்னை பார்த்து விட்டு மறைந்து விட்டாளே. இவளுக்கு சென்னையில் என்ன வேலை? அட முட்டாளே! அவள் சிவப்பு சுடிதார் அணிந்திருந்தாளே... வெள்ளை கைப்பை வைத்திருந்தாளே... அப்ப மைதிலி தான் அருணாவா?
கோவிலை விட்டு வரும் போது பிச்சைக்காரர்கள் "அம்மா... தாயே..." என்றார்கள். சில்லறையை போட்டான். பிச்சைக்காரர்கள் டைவர்ஸ் செய்வார்களா?
வீட்டுக்குள் நுழைந்ததும் ஷோபாவில் தொப்பென விழுந்தான். எரிச்சலாக வந்தது.
கடைசியில் புஸ்ஸென்று போய் விட்டதே. தன் டைவர்ஸ் மனைவியிடம் சாட்டிங் செய்திருக்கிறேன். அவளா இவ்வளவு மென்மையாக சாட்டிங் செய்தாள். யோசி... யோசி! சம்பவங்களை கோர்வயாக்கு. கோர்வையாக்கினான். முதலில் சாட்டிங் செய்தவளும் கோவிலில் பார்த்தவளும் ஒன்று தானா? இது தற்செயலாகக் கூட நடந்திருக்கலாம் இல்லையா? எப்படி யோசித்து பார்த்தாலும் மைதிலியும் அருணாவும் ஒன்று தான் என்றது.
சரி, அருணா என்று வைத்துக் கொண்டாலும் அவளா இப்படி! நம்பவே முடியவில்லை. அவளின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து விட்டு தவறாக முடிவெடுத்து விட்டேனா? அவளுக்கும் சாப்ட் கார்னர் இருக்கிறது என்ற மற்றொரு பக்கத்தை பார்க்க தவறி விட்டேனா?
அருமையாக கவிதை தொடுத்தாள். நிதானமாக சிந்தித்து சாட் செய்தாள்.
அவளும் இப்படித்தானே என்னை பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்! அவள் போன் நம்பர் தான் என்னிடம் இருக்கிறதே. போன் செய்து பார்த்தால் என்ன?
ராஜேஷ் செல்லை எடுத்து நம்பரை ஒத்த ஆரம்பித்தான்.
இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இவர்களை விட்டு விலகிச்செல்வோம்.**