திருமணத்தை தள்ளி போடும் பெண்கள்!! ஒரு வலை தளத்தில் படித்தது...


‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. குக் லீவு போட்டா எங்க அம்மாபார்த்துக்குவாங்கன்னு சொல்ல வேண்டியதுதானேநான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணும்காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...


No comments: