இன்றைய சமீபத்திய பிரச்சினை... மின்சாரம்! மழை மாதிரி எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாது.
மிஸ்டர் பொதுஜனத்திடம் இது பற்றி கேட்ட போது வந்து விழுந்த குமுறல்கள் சில...
1."நான் ஏழு மணிக்கு தான் படுக்கைய விட்டு எந்திரிப்பேன். ஆனா இன்னைக்கு சூழ்நிலையில காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்ச தான் வேலைய ஈசியா முடிக்க முடியும். தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம் காற்று, நீர், உணவு, உடை இருப்பிடம் அடுத்து மின்சாரத்தை முக்கிய பொருளா மாத்திகிட்டோம். பெரும்பாலும் காலையில் மோட்டார் போட்டு தண்ணிய கேன்ல ஏத்தனும். மிக்ஸியில சட்னி வக்கணும்... ஹீடர்ல தண்ணி சுட வச்சு குளிக்கணும். இப்படி மின்சாரத்தை அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சதனால இப்ப கஷ்டமா இருக்கு. இத்தனை மணிக்கு தான் கரண்ட் போகும்னு பேபர்ல போடுறாங்க. ஆனா அதன்படி கரண்ட் கட் பண்றது இல்லை."
2. "கரண்ட் பிரச்சனைய பத்தி அரசியல் கட்சிகளெல்லாம் ஆர்பாட்டம், போராட்டம்னு நிறைய பண்றாங்க... பொது மக்களான நாமளும் களத்தில இறங்கி போராடனும். அரசியல் கட்சிகளை சேர்த்துக்க கூடாது. நாமாவே ஒரு டீம் சேர்ந்து போராடணும்."
3. எலெக்ட்ரிக் பில்லை ஒரு நாள் லேட்டா கட்டினாலே பியுஸ் புடுங்க வந்துடறாங்க. ஆனா கரண்ட் மட்டும் அவங்க இஷ்டத்துக்கு விடறாங்க. பேசாம தமிழ்நாட்டுல இருக்கிற ஓவ்வொரு குடும்பமும் EB பில்ல கரண்ட் ஒழுங்கா விடுற வரைக்கும் கட்ட கூடாது. அப்பத்தான் புத்தி வரும்." என்று ஒருத்தர் பஞ்ச் டயலாக் வைத்தார்.
இல்ல தலைவிகளின் புலம்பல்கள் ஒரு ரகம் என்றால் தொழிலதிபர்கள், கடை முதலாளிகள் உற்பத்தியாளர்கள் ஆஸ்பத்திரிகள் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அடிமட்ட மக்களிலிருந்து மேல்மட்ட மக்கள் வரை பாதிப்பை உண்டாக்கும் இந்த மின்சார தடை சீக்கிரமே ஒரு நல்ல தீர்வுக்கு வந்தால் சந்தோஷம்.
இந்த பிரச்சினையால் ஒருத்தருக்கு நல்ல வாய்ப்பு... திருடர்களுக்கு! அதிலும் செயின் பறிப்புகள் அதிகமாக நடக்கும். பொது மக்களே ஜாக்கிரதை!
No comments:
Post a Comment