மிக சிறந்த விற்பனையாளராக>>>


மிக சிறந்த விற்பனையாளராக ஆவதற்கு சில டிப்ஸ்...(ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
** நீங்கள் கடினமாக உழைக்க தயாராக இருந்தால் விற்பனை தொழில் சிறந்த பயன் அளிக்கும் பணி வாழ்வு ஆகும். விற்பனை தொழில் புதிய படைப்புகளை உருவாக்கவும் பணியை தேவைகேற்ப மாற்றி கொள்வதற்கும் இடம் அளிக்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்ய மிகவும் பொருத்தமான அணுகுமுறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விற்பனையாளருக்கு உள்ளது. விற்பனையாளர் தனது வருமானத்தை நிர்ணயித்து கொள்கிறார்.
**நீங்கள் எந்த பொருளை விற்பனை செய்தாலும் அதை பற்றி விவரமாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த பொருள் அறிவு உங்களுக்கும் உங்களது வாடிக்கையாளருக்கும் பயன் அளிக்கும். இந்த பொருள் அறிவு உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிக்க உதவி புரியும். உங்களது பொருளை உபயோகிப்பதால் பெற கூடிய பயன்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து கூற முடியும்.
** உங்களது போட்டியாளர்களை உதாசீனபடுத்த கூடாது. போட்டியாளர்களின் பொருள்களை பற்றி விவரமாக அறிந்து கொண்டால் போட்டி பொருளை பற்றி உங்களிடம் யாரும் கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை வராது.
** உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும்.
** வாடிக்கையாளராக மாறக்கூடிய ஒருவர் தான், உங்களுக்கு இன்னொரு வாடிக்கையாளர் கிடைக்கும் வாய்ப்பை தருகிறார். அவர், உங்களது பொருளை அல்லது சேவையை பெற்றவுடன் வாடிக்கையாளராகி விடுகிறார்.
** வாடிக்கையாளராக மாற கூடியவரை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும். அவரது பெயர், தொழில், பொழுதுபோக்கு, பொருள் வாங்கும் முறை போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களை பற்றி கேட்க கூடாது. அதற்கு மதிபளிக்க வேண்டும். அவராக சொந்த விசயங்களை பற்றி கூறினால் அடக்கத்துடன் கேட்டு கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களில் தலையிட்டு துருவி கேட்க கூடாது.

No comments: