அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு முயற்சியில் ஈடுபட்டது பலருக்கு தெரியாது. ஆனால், அந்த முயற்சியை நாங்களும் இடதுசாரிகளும் முறியடித்த பின்னர், "பொதுத்துறை வங்கிகள் நல்ல நிலையில் இயங்குகின்றன... யாருக்கும் பாதிப்பில்லை" என்று இப்போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மார்தட்டுகிறார்.
அதாவது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொறுப்பு ஏற்றவுடன், ஒரு மசொதாய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் மசோதா அது. ஆனால், நம்முடைய வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தின் மதிப்பு, பத்து சதவீதத்துக்கு மேல் போக கூடாது என்பது தற்போதைய சட்டம். புதிய மசோதாவுக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தோம். "இந்த மசோதா நிறைவேறினால், வங்கிகளில் இருக்கும் சாமானியர்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை" என்று இடதுசாரிகள் கடுமையாக வாதாடினர். அந்த மசோதா நிறைவேறியிருந்தால், பொது மக்கள் பொதுத்துறை வங்கிகளில் தங்கள் சேமிப்பாக வைத்திருக்கும் பணம் மொத்தமும் இந்நேரம் அம்பேல் ஆகி இருக்கும்!
வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக நாங்கள் போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விசயத்தில் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அவசர வேண்டுகோள்."என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் வெங்கடாசலம் பேட்டி அளித்துள்ளார், ஒரு வார பத்திரிக்கைக்கு.
பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு, போன்ற முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட்டால் ஆபத்து அதிகம் என்று வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து உள்ள லச்சகணக்கான மக்களின் நம்பிக்கையை இது குறைக்கிறது. மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பணத்துக்கு ஆபத்து வராத வண்ணம் செயல்படுவது உத்தமம்.
அமெரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்று கொண்டு அதற்கேற்ப நம்முடைய வங்கி செயல்பாடுகளை அமைத்து கொள்வது பலன் தரும்.
No comments:
Post a Comment