என் புள்ள!

"அய்யோ... என் புள்ள! இத்தன பேர் நிக்கிறீங்களே... போய் காப்பாத்துங்களே..."
"பதட்டபடாதேம்மா... அதான் பக்கத்துல குழி தோண்டி ஒருத்தர் உள்ளே இறங்கி இருக்காருல்ல..."
"பாழாப்போன இந்த குழிக்குள்ளயா என் மகன் விழணும்? குழி தோண்டுனவுங்க வேலை முடிஞ்சப்புறம் மூடி வைக்க கூடாதா? இப்ப என் புள்ளயோட உசிருள்ள ஊசலாடுது!"
"பார்த்து... மெதுவா தூக்குங்க!"
என் புள்ளைக்கு காயம் படாம தூக்குங்க... ஏற்கனவே அவனுக்கு ஆஸ்த்துமா இருக்கு. இந்த குழியில மூச்சு விட முடியாம என் புள்ள எப்படி கஷ்டப்படுரானோ..."
"அப்படிதான்... இந்தாப்பா.. இப்படி வாங்கப்பா! சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு நிக்காதீங்க... ஒரு கை பிடிங்க... அப்பாடா ஒரு வழியா தூக்கியாச்சு... இந்தாம்மா உன் புள்ள!"
"அய்யயோ... என் புள்ள செயினு... ரெண்டு பவுனு... போன மாசம் தான் வாங்கினேன் அத காணோமே.. ஐயோ...!"

.srikarpagam.blogspot.com

amkarpagamamkarpakam

மாங்கல்யம் தந்துனானே...




புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!


இன்றைய சூழ்நிலையில் மணமான சிறிது நாட்களிலேயே டைவர்ஸ் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்... ஒருத்தருக்கொருத்தர் பிடிக்க வில்லை என்றால் உடனே டைவர்ஸ்! மேற்கத்திய கலாசாரம் இதிலேயும் புகுந்து விட்டது. முன்பை விட டைவர்ஸ் கேஸ் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

பிரச்சினை என்ன என்பதை இருவரும் உட்கார்ந்து பேசினாலே விஷயம் சுமூகமாக முடிந்து விடும்.

ஆனால் சுற்றி இருக்கும் சொந்தகாரர்கள் இருவருக்கும் இடையில் ஈகோவை வளர்த்து விடுகிறார்கள். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய குடும்ப பிரச்சனை சம்பந்தமாக வெளி ஆட்களிடம், முக்கியமாக சொந்தகாரர்களிடம் கருத்து கேட்டால், அவர்கள் பொதுவான கருத்து கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், கருத்து கூறுபவர்கள் அவர்களுக்கு சாதகமாக உள்ள முடிவையே சொல்வார்கள்.mu

மூன்று விசயங்களை மனதில் வைத்து கொண்டாலே குடும்ப வாழ்க்கை இனிக்கும்!

ஒருவர், மற்றொருவர் உணர்வுகளை-ரசனைகளை புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ வேண்டும்!

**இருவரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து, மனம் திறந்து பேசி, ரகசியங்கள் ஏதுமற்ற நட்புறவுடன் வாழ வேண்டும்!

**கூச்சமோ தயக்கமோ இன்றி இருவரும் சில பாலியல் விசயங்களை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்!

ஓகே ... தூள் கிளப்புங்கள்...!


நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

"ரோசமான பொம்பளையா இருந்தா இந்த மரத்து மேல நீ கை வைக்க கூடாது!"
"நான் ஏண்டி கைய வைக்க கூடாது? எங்கம்மா கொண்டு வந்த முருங்க கட்டய நட்டு வச்சது நான் தாண்டி!"
"நட்டு வச்சா மட்டும் போதுமா... தண்ணி ஊத்தி காப்பாத்த வேணாமா? தெனைக்கும் தண்ணி ஊத்தி காப்பாத்தினவா நான் தாண்டி... நீ வீடு தங்கினா தாண்டி தண்ணி ஊத்த ஞாபகம் வரும். நீ தான் ஊர் சுத்தி ஆச்சே!"
"யாருடி ஊர் சுத்தி... நீ தாண்டி ஊர் சுத்தி!"
"அம்மா... அம்மா! உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்திட்டு நான் சொல்றத கேக்கிறீங்களா? ரோட்ட அகலபடுதுறதால ரோட்டோர மரத்தையெல்லாம் வெட்டி எடுக்கிறதுக்கு காண்ட்ராக்ட் எடுத்து இருக்கேன். கொஞ்சம் தள்ளி இருங்க. அப்புறம் இன்னொரு விஷயம்... நீங்க ரெண்டு பேரும் இந்த மரத்தை உருவாக்கி இருக்கிறீங்கன்னு உங்க சண்டைய வச்சு புரிஞ்சுகிட்டேன். அதனால இதுல இருக்கிற முருங்கை காய்களை நீங்களே பங்கு போட்டுகுங்க!"
"நான் எதுக்கு அவளுக்கு பங்கு தரணும்?"
"நீ எனக்கு பங்கு தர வேணாம்... முழுசையும் நானே எடுத்துக்கிறேன்!"
காண்ட்ராக்டர் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்!!
://srikarpagam.blogspot.com
amkarpagam@gmail.com

குறளின் குரல்-2

தன்னம்பிக்கை
கிருஷ்ணனுக்கு மனம் சலிப்பாக இருந்தது. நீண்டு கிடந்த சாலையில், தான் மட்டும் தனியாளாக உணர்ந்தான். எதிர்காலமே ஒரு கேள்விகுறி போல் அவன் நெஞ்சை குத்தியது!
"எத்தனை இன்டர்வியு... எல்லாமே புஷ்வானமா போச்சே... வீட்டிலே சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியல!" என்றது மனம்.
காற்று வாக்கில் யாரோ ஒரு மகான் சொற்பொழிவாற்றும் ஒலியை கேட்டு அங்கே சென்றான்.
சிவன் கோவில். சிறிய கோவில் தான், ஆனாலும் சிறப்பாக இருந்தது.
சுற்று பிரகாரத்தில் அந்த மகான் பேசினார். சுற்றிலும் ஐம்பது பேராவது உட்கார்ந்திருப்பார்கள்.
"திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்... கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின். அதாவது 'தூய அறிவு வடிவாய் விளங்கும் இறைவனுடைய திருவடிகளை ஒருவன் பற்றி நின்று நாளும் தொழுது எழவில்லை என்றால், அவன் கற்ற கல்வியால் விளையக்கூடிய பயன் என்ன? அப்பிடின்னு கேக்கிறார்".
கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. "சாமி... நான் தினமும் சாமி கும்பிட்டுட்டு தான் இருக்கேன். ஆனாலும் எனக்கு இன்னும் வேலை கிடைகலயே" என்றான்.
மகான் அவனை பார்த்தார்.
அவர் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. என்ன ஒரு தீர்கமான பார்வை...
"உன் பேச்சிலேயே நம்பிக்கை இன்மை தெரிகிறது . நீ எம்பெருமானை வழிபடும் முறை சரியில்லை. நீ சாமி கும்பிடும் போது உன் ஆழ் மனதில் என் திறமைக்கு யார் வேலை தருவார்கள்' என்ற நினைப்பிலேயே சாமி கும்பிடுகிறாய்"
கிருஷ்ணன் யோசித்து பார்த்தான். அவர் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.
"அது உன் குற்றமில்லை. நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. கடவுளை தொழுவது எனபது தேங்காய் பழம் வாங்கி அர்ச்சனை செய்வதிலோ சூடம் கொளுத்துவதிலோ yஇல்லை. கடவுளை முழுவதும் நம்பி வழிபடுபவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். ஏதோ கோவிலுக்கு வந்தோம்... சாமி கும்பிட்டோம் என்று இல்லாமல் பத்து நிமிடம் அமர்ந்து எம்பெருமானின் உருவத்தை மனதில் நினைத்து மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய். ஒரு மாதத்தில் உன் தன்னம்பிக்கை பெருகுகிறதா இல்லையா பார்." என்று கூறி விட்டு தன் சொற்பொழிவை தொடர்ந்தார்.
கிருஷ்ணன் மனத்தில் அப்போதே தன்னம்பிக்கை ஊற்றெடுக்க ஆரம்பித்தது
.

www://srikarpagam.blogspot.com
email: amkarpagam@gmail.com

மனிதரில் இத்தனை நிறங்களா?






உள்ளத்தை சொல்கிறேன்!
மேலே உள்ள படங்களை சில நண்பர்களிடம் காண்பித்து கருத்து கேட்ட போது...
"நட்புக்கு ஜாதி மத பேதம், உருவம், எதுவும் தேவை இல்லை! நம்பிக்கை மட்டுமே போதும்..." என்றார் ஒரு நண்பர்.
மற்றொருவர், "இந்த நாய் ரொம்ப சாதுவாகவும், சோம்பேறி தனமாகவும் இருக்கு!" என்றார்.
இன்னொருவர், "இந்த பூனைக்கு எத்தனை துணிச்சல்!" என்றார்.
"ரெண்டும் காதல் பண்ணுது!" -- ஒரு காதலர்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ஈமெயில்: amkarpagam.gmail.com

ராமேஸ்வரம் டிப்ஸ்!

சுற்றுலா!


**ராமேஸ்வரத்துக்கு பஸ்ஸில் செல்வதை விட ரயிலில் செல்வது உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் ஊரிலிருந்து ரயில் இல்லையென்றால்-- மதுரையிலிருந்தோ, திருச்சியிலுருந்தோ புறப்படும் ரயிலில் போகலாம். ரயிலில் பயணம் செய்ய சொல்வதற்கு காரணம்... ரயில் கடல் பாலத்தை கடக்கும் போது ஏற்படும் உற்சாகம்! கடல் நீரை ஒட்டியே ரயில் செல்வதால் ஏற்படும் குதூகலம்!! மேலும், பஸ் பயணதொகையை விட ரயில் பயணத்தொகை பாதியாக குறைகிறது.
**கோவில் அருகிலுள்ள லாட்ஜ் அல்லது சாத்திரங்கள் ஏதாகிலும் இடம் பிடித்து கொள்வது நல்லது. காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஸ்படிக லிங்க தரிசனம் செய்வதற்கு விடிகாலை மூன்று முப்பது மணியிலிருந்தே கியு வளர ஆரம்பிக்கிறது. விசேச தினங்களில் பெரிய கியு!**ராமேஸ்வரம் கோவிலுக்கு திங்கட்கிழமை செல்வது தான் சிறப்பு. அது எந்த திங்களாக இருந்தாலும் சரி!
**கோவிலுக்குள் நுழையுமுன் வலது பக்கம் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அதன் சுற்று பிரகாரத்தை சுற்றி வரும் போது ஆத்ம லிங்க தரிசனம் கிடைக்கும். முதலில் ஆத்ம லிங்கத்தை தரிசித்து விட்டு கோவிலுக்குள் செல்வது தான் சிறப்பு. ஏனென்றால், அந்த லிங்கம் ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கமாக நம்பப்படுகிறது. முதல் அபிசேகம் ஆத்மலிங்கத்துக்கு தான் என்று ஸ்ரிராமபிரானே சொன்னதாக புராணம் கூறுகிறது!
**கோவில் சுற்று பிரகாரத்தை அவசியம் பார்க்க வேண்டும். மிக நேர்த்தியாக கட்டடகலையின் உன்னதம் நம் கண்களுக்கு முன் விரிகிறது! இந்தியாவிலேயே மிக பெரிய சுற்று பிரகாரமாக சொல்லப்படுகிறது.
**ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.


email: amkarpagamgmail.com

அமில மழை!

கதம்பம்

சிடிட்டி கேள்விபட்டிருப்பீர்கள்... அதென்ன ஆசிட் ரெயின்? அதாவது அமில மழை?
கோடிகணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த விலங்குகள், தாவரங்கள் பூமிக்குள் புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கி போய் இயற்க்கை வாயுபொருட்கள் எண்ணை, நிலக்கரியாக அவதாரம் எடுக்கிறது. தசாவதாரத்தில் கமல் பல அவதாரங்கள் எடுப்பது போல...
மேற்கூறப்பட்ட மூன்று பொருட்களிலும் சல்பர் இருப்பது தான் வினையே! அவை எரிக்கப்படும்போது சல்பர் ஆக்ஸிஜன் உடன் சேர்ந்து sulphar di oxide ஆக உருமாறுகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
பூமியின் மேற்பரப்பில் nitrogen, oxygen இயற்கையாகவே இருக்கிறது. வாயுக்கள், நிலக்கரி, எண்ணை எரிக்கப்படும்போது nitrogen oxygen இணைந்து nitrogen di oxide ஆக உருமாறுகிறது.
sulphur di oxide அல்லது nitrogen oxide நீர் மூலக்கூறில் சேர்ந்து அமில மழை ஆக மாறி பூமியில் விழுகிறது.
இது பெரும்பாலும் நீர்நிலைகளான ஆறு குளம் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கிறது. முக்கியமாக நாம் சாப்பிடும் மீன்களுக்கு அசவுகரியம்!

______________________________________________________

வசனம்!
அறிந்தவர் வீட்டுக்கு தெரிந்தவர் சென்ற போது நாய் குறைத்தது.
நாய் சொந்தக்காரர்," சும்மா 'லொள்ளு' பண்ணாதே!!" என்றார், நாயை பார்த்து!

__________________________________________________________________________

கவிதை
அரண்மனைக்குள் ஒரு சர்ச்சை
கூந்தல் மணம் இயற்கையா...
குங்கிலியத்தால் செயற்கையா என்று!
உள்ளே வந்தாள் மன்னனின் மனைவி
'முகர்ந்து பார்' என்றாள்
கட்டிய சவுரியை கையில் எடுத்து!

all rights are reserved by karpagam

குறளின் குரல்!

" அகரம்னா என்னப்பா?"

டிவியில் பாலச்சந்தர் படம் தொடங்க போகிறது என்பதற்கு அறிகுறியாக திருவள்ளுவர் சிலை திரையில் சுற்றியது. பின்னணியில் எம். எஸ். விஸ்வநாதன் "அகர முதல எழுத்தெல்லாம்... ஆதி பகவன் முதற்றே உலகு!" என்று கவர்ச்சியான குரலில் பாடினார்.
"ஹையா! என்னோட பாடத்துல வர்ற திருக்குறளை பாடறாங்கப்பா!" என்று துள்ளியது ஒரு குட்டீஸ். தொடர்ந்து, "அப்பா... இந்த குறளுக்கு அர்த்தம் என்னப்பா?" என்று கேட்டது.
"இது கடவுள் வாழ்த்துல அதிகாரம் ஒண்ணுல வர்ற முதல் குறளுப்பா! இந்த குறளோட விளக்கம் என்னன்னா... 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு விளங்குகின்றன. அதை போல் எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக விளங்கும் பகவானையே முதலாக கொண்டு விளங்குகின்றது உலகம்' சரிதானா?"
"அப்பா... அகரம்னா என்னப்பா?"
" 'அஎன்னும் எழுத்துன்னு அர்த்தம்பா. எல்லா எழுத்துக்கும் முதல் எழுத்து அதாம்பா! இப்ப இந்தியாவோட முதல் குடி மகன் யாரு?"
"நம்ம ஜனாதிபதி தானப்பா..."
கரெக்ட்! அது மாதிரி உலகத்துக்கு முதல் குடிமகன் பகவான் தான் அப்படிங்கிறார் திருவள்ளுவர்!"
"ஆனா அப்பா! நம்ம நாட்டுல ஜனாதிபதியை rubber stamp மாதிரி பயன்படுதுறாங்கன்னு சொல்றாங்களே... நாம கடவுளையும் அப்படித்தான் பயன் படுத்துகிறோமா ? "
அப்பா வாயடைத்து நிற்கிறார்!

உணவு தரும் தேனீக்கள்!


வருக... வருக...!

வணக்கம்! நமது தமிழ் பண்பாட்டின்படி இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன். இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் நீங்கள், இந்த நிமிடத்தில் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தாலும் சரி... அதையெல்லாம், காலணியை கழற்றி வீட்டுக்கு வெளியே வைத்து விட்டு வருவதுபோல் துக்கங்களையும் தோல்விகளையும் கழற்றி தூர எறிந்து விட்டு சிரித்த முகத்துடன் வந்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நாம் இயற்கையை எப்படி உதாசினபடுத்துகிறோம் என்பதை பற்றி சற்று சிந்திப்போம்.

இயற்கையை விடுத்து நாம் செயற்கைக்கு மாற ஆரம்பித்த கணத்திலிருந்து பூமியை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறோம். சுற்றுப்புற சூழ்நிலையை நமது வசதிக்காக தூய்மை கேடாக்கி கொண்டிருக்கிறோம்.

நடந்து செல்லும் தூரத்தைகூட பைக்கில் கடந்து செல்கிறோம்.

இயற்கை நமக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து நம்மை வாழ வைக்கிறது. ஆனால் நாம் இயற்கையை வாழ வைக்க வேண்டாம்... அட்லீஸ்ட் ஏறி மிதிக்காமல் இருந்தாலே போதும்.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

பழைய பழமொழி...

நமது சாப்பாட்டு அறைக்கு ஆப்பிள், சோயாபீன்ஸ், வெள்ளரிக்காய் முதலியவை போன்று தொண்ணூறு வகைக்கு மேற்பட்ட சுவையான பழங்கள், காய்கறிகளை நமக்கு அழிப்பது யார்?

விவசாயிகள்...

இல்லை...

விவசாயிகள் தானே இதையெல்லாம் விளைவிக்கிறார்கள்?

உண்மைதான்!

ஆனால், தேனீக்கள் அதை விட சிறப்பாக இயற்கையாகவே காய்கனிகளை விளைவிக்கிறது.

தேனீக்கள் துணையில்லாமல் நமக்கு சத்தான சுவையான பழங்கள், காய்கறிகள் பாதிக்குமேல் கிடைக்காமல் போய் விடும்.

தேனீக்களின் மகரந்த சேர்க்கை விளைவுகளாலே தான் நாம் பசியாறிகொண்டு இருக்கிறோம்.

பூச்சிஇனங்களின் மகரந்தச்சேர்க்கயால் மூன்றில் ஒரு பங்கு உணவினை பெறுகிறோம். அதிலும் தேனீக்களின் பங்கு எண்பது சதவீதம் என்று us department of agriculture சொல்கிறது.

நாம் தேனீக்கள் அளவுக்கு எண்பது சதவீதம் இயற்கையான முறையில் எந்த விஷயத்தையும் செய்ய முடியாவிட்டாலும், கொஞ்சமாவது இயற்கையோடு இயைந்து வாழ கற்று கொள்வோம்.

நம் முன்னோர்கள் எல்லாம் இயற்கையை நேசித்தவர்கள்... இயற்கையோடு வாழ்ந்தவர்கள்! நாம் இப்போது இயற்கையை போட்டோக்களிலும், சித்திரங்களிலும் மட்டுமே நேசிக்கிறோம்!!