உணவு தரும் தேனீக்கள்!


வருக... வருக...!

வணக்கம்! நமது தமிழ் பண்பாட்டின்படி இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறேன். இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் நீங்கள், இந்த நிமிடத்தில் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தாலும் சரி... அதையெல்லாம், காலணியை கழற்றி வீட்டுக்கு வெளியே வைத்து விட்டு வருவதுபோல் துக்கங்களையும் தோல்விகளையும் கழற்றி தூர எறிந்து விட்டு சிரித்த முகத்துடன் வந்தீர்களானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

நாம் இயற்கையை எப்படி உதாசினபடுத்துகிறோம் என்பதை பற்றி சற்று சிந்திப்போம்.

இயற்கையை விடுத்து நாம் செயற்கைக்கு மாற ஆரம்பித்த கணத்திலிருந்து பூமியை அசுத்தமாக்கி கொண்டிருக்கிறோம். சுற்றுப்புற சூழ்நிலையை நமது வசதிக்காக தூய்மை கேடாக்கி கொண்டிருக்கிறோம்.

நடந்து செல்லும் தூரத்தைகூட பைக்கில் கடந்து செல்கிறோம்.

இயற்கை நமக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து நம்மை வாழ வைக்கிறது. ஆனால் நாம் இயற்கையை வாழ வைக்க வேண்டாம்... அட்லீஸ்ட் ஏறி மிதிக்காமல் இருந்தாலே போதும்.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

பழைய பழமொழி...

நமது சாப்பாட்டு அறைக்கு ஆப்பிள், சோயாபீன்ஸ், வெள்ளரிக்காய் முதலியவை போன்று தொண்ணூறு வகைக்கு மேற்பட்ட சுவையான பழங்கள், காய்கறிகளை நமக்கு அழிப்பது யார்?

விவசாயிகள்...

இல்லை...

விவசாயிகள் தானே இதையெல்லாம் விளைவிக்கிறார்கள்?

உண்மைதான்!

ஆனால், தேனீக்கள் அதை விட சிறப்பாக இயற்கையாகவே காய்கனிகளை விளைவிக்கிறது.

தேனீக்கள் துணையில்லாமல் நமக்கு சத்தான சுவையான பழங்கள், காய்கறிகள் பாதிக்குமேல் கிடைக்காமல் போய் விடும்.

தேனீக்களின் மகரந்த சேர்க்கை விளைவுகளாலே தான் நாம் பசியாறிகொண்டு இருக்கிறோம்.

பூச்சிஇனங்களின் மகரந்தச்சேர்க்கயால் மூன்றில் ஒரு பங்கு உணவினை பெறுகிறோம். அதிலும் தேனீக்களின் பங்கு எண்பது சதவீதம் என்று us department of agriculture சொல்கிறது.

நாம் தேனீக்கள் அளவுக்கு எண்பது சதவீதம் இயற்கையான முறையில் எந்த விஷயத்தையும் செய்ய முடியாவிட்டாலும், கொஞ்சமாவது இயற்கையோடு இயைந்து வாழ கற்று கொள்வோம்.

நம் முன்னோர்கள் எல்லாம் இயற்கையை நேசித்தவர்கள்... இயற்கையோடு வாழ்ந்தவர்கள்! நாம் இப்போது இயற்கையை போட்டோக்களிலும், சித்திரங்களிலும் மட்டுமே நேசிக்கிறோம்!!

No comments: