குறளின் குரல்-2

தன்னம்பிக்கை
கிருஷ்ணனுக்கு மனம் சலிப்பாக இருந்தது. நீண்டு கிடந்த சாலையில், தான் மட்டும் தனியாளாக உணர்ந்தான். எதிர்காலமே ஒரு கேள்விகுறி போல் அவன் நெஞ்சை குத்தியது!
"எத்தனை இன்டர்வியு... எல்லாமே புஷ்வானமா போச்சே... வீட்டிலே சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியல!" என்றது மனம்.
காற்று வாக்கில் யாரோ ஒரு மகான் சொற்பொழிவாற்றும் ஒலியை கேட்டு அங்கே சென்றான்.
சிவன் கோவில். சிறிய கோவில் தான், ஆனாலும் சிறப்பாக இருந்தது.
சுற்று பிரகாரத்தில் அந்த மகான் பேசினார். சுற்றிலும் ஐம்பது பேராவது உட்கார்ந்திருப்பார்கள்.
"திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்... கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின். அதாவது 'தூய அறிவு வடிவாய் விளங்கும் இறைவனுடைய திருவடிகளை ஒருவன் பற்றி நின்று நாளும் தொழுது எழவில்லை என்றால், அவன் கற்ற கல்வியால் விளையக்கூடிய பயன் என்ன? அப்பிடின்னு கேக்கிறார்".
கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. "சாமி... நான் தினமும் சாமி கும்பிட்டுட்டு தான் இருக்கேன். ஆனாலும் எனக்கு இன்னும் வேலை கிடைகலயே" என்றான்.
மகான் அவனை பார்த்தார்.
அவர் கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை. என்ன ஒரு தீர்கமான பார்வை...
"உன் பேச்சிலேயே நம்பிக்கை இன்மை தெரிகிறது . நீ எம்பெருமானை வழிபடும் முறை சரியில்லை. நீ சாமி கும்பிடும் போது உன் ஆழ் மனதில் என் திறமைக்கு யார் வேலை தருவார்கள்' என்ற நினைப்பிலேயே சாமி கும்பிடுகிறாய்"
கிருஷ்ணன் யோசித்து பார்த்தான். அவர் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.
"அது உன் குற்றமில்லை. நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. கடவுளை தொழுவது எனபது தேங்காய் பழம் வாங்கி அர்ச்சனை செய்வதிலோ சூடம் கொளுத்துவதிலோ yஇல்லை. கடவுளை முழுவதும் நம்பி வழிபடுபவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். ஏதோ கோவிலுக்கு வந்தோம்... சாமி கும்பிட்டோம் என்று இல்லாமல் பத்து நிமிடம் அமர்ந்து எம்பெருமானின் உருவத்தை மனதில் நினைத்து மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய். ஒரு மாதத்தில் உன் தன்னம்பிக்கை பெருகுகிறதா இல்லையா பார்." என்று கூறி விட்டு தன் சொற்பொழிவை தொடர்ந்தார்.
கிருஷ்ணன் மனத்தில் அப்போதே தன்னம்பிக்கை ஊற்றெடுக்க ஆரம்பித்தது
.

www://srikarpagam.blogspot.com
email: amkarpagam@gmail.com

No comments: