**ராமேஸ்வரத்துக்கு பஸ்ஸில் செல்வதை விட ரயிலில் செல்வது உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் ஊரிலிருந்து ரயில் இல்லையென்றால்-- மதுரையிலிருந்தோ, திருச்சியிலுருந்தோ புறப்படும் ரயிலில் போகலாம். ரயிலில் பயணம் செய்ய சொல்வதற்கு காரணம்... ரயில் கடல் பாலத்தை கடக்கும் போது ஏற்படும் உற்சாகம்! கடல் நீரை ஒட்டியே ரயில் செல்வதால் ஏற்படும் குதூகலம்!! மேலும், பஸ் பயணதொகையை விட ரயில் பயணத்தொகை பாதியாக குறைகிறது.
**கோவில் அருகிலுள்ள லாட்ஜ் அல்லது சாத்திரங்கள் ஏதாகிலும் இடம் பிடித்து கொள்வது நல்லது. காலையில் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஸ்படிக லிங்க தரிசனம் செய்வதற்கு விடிகாலை மூன்று முப்பது மணியிலிருந்தே கியு வளர ஆரம்பிக்கிறது. விசேச தினங்களில் பெரிய கியு!**ராமேஸ்வரம் கோவிலுக்கு திங்கட்கிழமை செல்வது தான் சிறப்பு. அது எந்த திங்களாக இருந்தாலும் சரி!
**கோவிலுக்குள் நுழையுமுன் வலது பக்கம் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அதன் சுற்று பிரகாரத்தை சுற்றி வரும் போது ஆத்ம லிங்க தரிசனம் கிடைக்கும். முதலில் ஆத்ம லிங்கத்தை தரிசித்து விட்டு கோவிலுக்குள் செல்வது தான் சிறப்பு. ஏனென்றால், அந்த லிங்கம் ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கமாக நம்பப்படுகிறது. முதல் அபிசேகம் ஆத்மலிங்கத்துக்கு தான் என்று ஸ்ரிராமபிரானே சொன்னதாக புராணம் கூறுகிறது!
**கோவில் சுற்று பிரகாரத்தை அவசியம் பார்க்க வேண்டும். மிக நேர்த்தியாக கட்டடகலையின் உன்னதம் நம் கண்களுக்கு முன் விரிகிறது! இந்தியாவிலேயே மிக பெரிய சுற்று பிரகாரமாக சொல்லப்படுகிறது.
**ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிளம்பி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
email: amkarpagamgmail.com
No comments:
Post a Comment