டிவியில் பாலச்சந்தர் படம் தொடங்க போகிறது என்பதற்கு அறிகுறியாக திருவள்ளுவர் சிலை திரையில் சுற்றியது. பின்னணியில் எம். எஸ். விஸ்வநாதன் "அகர முதல எழுத்தெல்லாம்... ஆதி பகவன் முதற்றே உலகு!" என்று கவர்ச்சியான குரலில் பாடினார்.
"ஹையா! என்னோட பாடத்துல வர்ற திருக்குறளை பாடறாங்கப்பா!" என்று துள்ளியது ஒரு குட்டீஸ். தொடர்ந்து, "அப்பா... இந்த குறளுக்கு அர்த்தம் என்னப்பா?" என்று கேட்டது.
"இது கடவுள் வாழ்த்துல அதிகாரம் ஒண்ணுல வர்ற முதல் குறளுப்பா! இந்த குறளோட விளக்கம் என்னன்னா... 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டு விளங்குகின்றன. அதை போல் எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக விளங்கும் பகவானையே முதலாக கொண்டு விளங்குகின்றது உலகம்' சரிதானா?"
"அப்பா... அகரம்னா என்னப்பா?"
" 'அஎன்னும் எழுத்துன்னு அர்த்தம்பா. எல்லா எழுத்துக்கும் முதல் எழுத்து அதாம்பா! இப்ப இந்தியாவோட முதல் குடி மகன் யாரு?"
"நம்ம ஜனாதிபதி தானப்பா..."
கரெக்ட்! அது மாதிரி உலகத்துக்கு முதல் குடிமகன் பகவான் தான் அப்படிங்கிறார் திருவள்ளுவர்!"
"ஆனா அப்பா! நம்ம நாட்டுல ஜனாதிபதியை rubber stamp மாதிரி பயன்படுதுறாங்கன்னு சொல்றாங்களே... நாம கடவுளையும் அப்படித்தான் பயன் படுத்துகிறோமா ? "
அப்பா வாயடைத்து நிற்கிறார்!
No comments:
Post a Comment