மிக சிறந்த விற்பனையாளராக>>>


மிக சிறந்த விற்பனையாளராக ஆவதற்கு சில டிப்ஸ்...(ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
** நீங்கள் கடினமாக உழைக்க தயாராக இருந்தால் விற்பனை தொழில் சிறந்த பயன் அளிக்கும் பணி வாழ்வு ஆகும். விற்பனை தொழில் புதிய படைப்புகளை உருவாக்கவும் பணியை தேவைகேற்ப மாற்றி கொள்வதற்கும் இடம் அளிக்கிறது. ஒரு பொருளை விற்பனை செய்ய மிகவும் பொருத்தமான அணுகுமுறையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விற்பனையாளருக்கு உள்ளது. விற்பனையாளர் தனது வருமானத்தை நிர்ணயித்து கொள்கிறார்.
**நீங்கள் எந்த பொருளை விற்பனை செய்தாலும் அதை பற்றி விவரமாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த பொருள் அறிவு உங்களுக்கும் உங்களது வாடிக்கையாளருக்கும் பயன் அளிக்கும். இந்த பொருள் அறிவு உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்வதுடன் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலளிக்க உதவி புரியும். உங்களது பொருளை உபயோகிப்பதால் பெற கூடிய பயன்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து கூற முடியும்.
** உங்களது போட்டியாளர்களை உதாசீனபடுத்த கூடாது. போட்டியாளர்களின் பொருள்களை பற்றி விவரமாக அறிந்து கொண்டால் போட்டி பொருளை பற்றி உங்களிடம் யாரும் கேள்வி கேட்டால் பதில் தெரியாமல் தவிக்க வேண்டிய நிலை வராது.
** உங்கள் நிறுவனத்தை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும்.
** வாடிக்கையாளராக மாறக்கூடிய ஒருவர் தான், உங்களுக்கு இன்னொரு வாடிக்கையாளர் கிடைக்கும் வாய்ப்பை தருகிறார். அவர், உங்களது பொருளை அல்லது சேவையை பெற்றவுடன் வாடிக்கையாளராகி விடுகிறார்.
** வாடிக்கையாளராக மாற கூடியவரை பற்றிய விவரங்களை அதிக அளவில் அறிந்து கொள்ள வேண்டும். அவரது பெயர், தொழில், பொழுதுபோக்கு, பொருள் வாங்கும் முறை போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களை பற்றி கேட்க கூடாது. அதற்கு மதிபளிக்க வேண்டும். அவராக சொந்த விசயங்களை பற்றி கூறினால் அடக்கத்துடன் கேட்டு கொள்ள வேண்டும். அவரது சொந்த விசயங்களில் தலையிட்டு துருவி கேட்க கூடாது.

"ஊத்திட்டேன் முதலாளி!!"


"பெட்ரோல் வாங்கிட்டு வந்துட்டியா?"
"வாங்கிட்டு வந்துட்டேன் முதலாளி... இந்தாங்க..." என்று விட்டு ஒரு லிட்டர் பாட்டிலை நீட்டினான் வேலையாள்.
வாங்கி பார்த்த முதலாளி,"அளவு சரியா தான் இருக்கு. போய் வண்டி பெட்ரோல் டாங்கில ஊத்து!"
சிறிது நேரம் கழித்து... "என்னடா... ஊத்திட்டியா?" என்று கேட்டார் முதலாளி.
"ஊத்திட்டேன்..."
முதலாளி வண்டியை ஸ்டார்ட் செய்தார். அது ஸ்டார்ட் ஆகவில்லை. கிக்கரை காலால் அடித்து ஓய்ந்து போய்..."ஏண்டா... பெட்ரோலை ஊத்தினாயா இல்லையா?" என்று கேட்டார்.
"ஊத்திட்டேன் முதலாளி..."
"எல்லாத்தையும் ஊத்தினியா?"
"ஒரு சொட்டு கூட மிச்சம் வக்கல முதலாளி... எல்லாத்தையும் ஊத்திட்டு, போதாததுக்கு தண்ணிய விட்டு அலசி ஊத்தினேன்...!"என்றான் வேலையாள்.

இப்போது பேங்க் - பாதுகாப்பான முதலீடா?



மெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு முயற்சியில் ஈடுபட்டது பலருக்கு தெரியாது. ஆனால், அந்த முயற்சியை நாங்களும் இடதுசாரிகளும் முறியடித்த பின்னர், "பொதுத்துறை வங்கிகள் நல்ல நிலையில் இயங்குகின்றன... யாருக்கும் பாதிப்பில்லை" என்று இப்போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மார்தட்டுகிறார்.

அதாவது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொறுப்பு ஏற்றவுடன், ஒரு மசொதாய் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் மசோதா அது. ஆனால், நம்முடைய வங்கிகளில் வெளிநாட்டு மூலதனத்தின் மதிப்பு, பத்து சதவீதத்துக்கு மேல் போக கூடாது என்பது தற்போதைய சட்டம். புதிய மசோதாவுக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தோம். "இந்த மசோதா நிறைவேறினால், வங்கிகளில் இருக்கும் சாமானியர்களின் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை" என்று இடதுசாரிகள் கடுமையாக வாதாடினர். அந்த மசோதா நிறைவேறியிருந்தால், பொது மக்கள் பொதுத்துறை வங்கிகளில் தங்கள் சேமிப்பாக வைத்திருக்கும் பணம் மொத்தமும் இந்நேரம் அம்பேல் ஆகி இருக்கும்!

வரும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பொதுத்துறை வங்கிகளில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக நாங்கள் போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விசயத்தில் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அவசர வேண்டுகோள்."என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் வெங்கடாசலம் பேட்டி அளித்துள்ளார், ஒரு வார பத்திரிக்கைக்கு.
பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு, போன்ற முதலீட்டு திட்டங்களில் பணத்தை போட்டால் ஆபத்து அதிகம் என்று வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து உள்ள லச்சகணக்கான மக்களின் நம்பிக்கையை இது குறைக்கிறது. மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பணத்துக்கு ஆபத்து வராத வண்ணம் செயல்படுவது உத்தமம்.
அமெரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்று கொண்டு அதற்கேற்ப நம்முடைய வங்கி செயல்பாடுகளை அமைத்து கொள்வது பலன் தரும்.

எதற்கு படிக்க வேண்டும்?







நாம் தினமும் எத்தனையோ செய்தித்தாள்களையும், வார மாத இதழ்களையும், நூலகத்தில் எடுத்து வந்த தடியான புத்தகங்களையும் (சில சமயம் தலையணையாக பயன்படும்) படிக்கிறோம்.
ஆனால் படிப்பதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்த்திருப்போமா?
சற்று சிந்திப்போம்.
கடைகளில் அமர்ந்து செய்தித்தாளை ஒரு வரி விடாமல் படித்து விட்டு தான் (விளம்பரம் முதற்கொண்டு) கீழே வைப்பார். சிலர் சில குறிப்பிட்ட செய்திகளை மட்டும் படித்து விட்டு வைத்து விடுவார். தலைப்பு செய்திகளை மட்டும் வாசிப்போர் பலர்.
இதே செய்திகளை தான் கதை போல் கட்டுரையாக மாற்றி, வாசிபோர் மனம் மகிழும்படி கொடுக்கிறார்கள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் போன்ற வார இதழ்களில். ஒரு சிறிய
விஷயத்தை வைத்து அது தொடர்பாக பல செய்திகளை ஒன்று திரட்டி கொடுப்பது தான் கட்டுரை. இது மாதிரி கட்டுரைகளை தான் நம்மால் படிக்க முடியும்.
எளிமையான உரையில் ஆங்கில கலப்பு சேர்த்து கதை தோரணையில் வரும் கட்டுரைகளை தான் நம்மால் தொடர்ந்து படிக்க முடியும்.
கடினமான சொற்களை போட்டு, ஒரே வரியில் மூன்று விசயங்களை வைத்து தன் தமிழ் புலமையை மொத்தமாக காட்டி எழுதப்படும் கட்டுரைகளை நம்மால் ஒரு பாராவுக்கு மேல் படிக்க முடிவதில்லை.
மொத்தமாக பார்க்கும் போது நாம் எதற்காக படிக்கிறோம் என்று பார்த்தால், அது அவரவர் டேஸ்டை பொறுத்தது. ஸ்போர்ட்ஸ், பங்குச்சந்தை, வியாபார உத்திகள், கம்ப்யூட்டர் தொடர்பானவை என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளது. உதாரணமாக "கதை" எடுத்து கொள்ளுங்கள். அதிலேயே ஏகப்பட்ட டேஸ்ட் இருக்கிறது
துப்பறியும் கதை, பக்தி கதை, காதல் கதை என்று பட்டியல் நீளும்.

மெயின் மேட்டேருக்கு வருவோம்.

இவ்வளவு தூரம் படிக்கிறோமே... அதனால் என்ன பலன் கண்டீர்கள்?
ஹெல்த் சம்பந்தமாகவோ, பங்குச்சந்தை சம்பந்தமாகவோ படித்திருந்தால் அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்து பார்க்கலாம். ஆனால் கதை மற்றும் சில ஜெனரல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பலன் இருக்கிறது என்று யோசித்து பார்த்ததுண்டா? அதை நம் வாழ்க்கையில் அப்ளை செய்ய முடியுமா?

முடியாது!

ஆனால் சில வேறு மாதிரியான பழங்கள் கிடைக்கிறது. பெரும்பாலும் குடும்ப நாவல், துப்பறியும் நாவல் படிப்பவர்களை கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு ஒன்று தெளிவாகும். ஒரு சம்பவத்தை சட்டென்று புரிந்து கொள்வார்கள். அதாவது ஒரு பிரச்சனை சம்பந்தமாக பேசும் போது எதிராளியின் மனோ நிலையை எளிதில் கிரகித்து விடுவார்கள். எதிராளி பேசும் விஷயத்தை வைத்து, அவர் எதனால் இப்படி பேசுகிறார் என்பதையும் கண்டுபிடித்து விடுவார்கள்.
நுணுக்கமான விசயங்களை கூட சீக்கிரமே உள் வாங்கி கொள்வார்கள். இந்த விஷயம் ஒரு சிறந்த நிர்வாகிக்கு அவசியம் தேவை.
சுருக்கமாக சொன்னால் டியுப் லைட்டாக வாழை மட்டையாக இல்லாமல் கற்பூரம் போல டக்கென்று பற்றி கொள்வார்கள் கொஞ்சம் திரும்பி குடும்ப தலைவிகளின் சீரியல்களுக்கு வருவோம். பெரும்பாலான பெண்கள் இப்போது டிவி சீரியல் பார்க்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் தான் சமைக்கிறார்கள். இது சம்பந்தமாக நிறைய ஜோக்குகளும் வலம் வருகின்றன.

"எடுபட்ட பயக... கரண்ட் கட் பண்ற நேரத்தை மாத்தி வச்சுட்டாங்க.. பன்னண்டு டூ ரெண்டுன்னு மாத்திட்டாங்க.. அந்த நேரத்தில நாலு நாடகம் பார்க்க முடியாம போயிடுமே...!"என்பது சமீபத்திய வசனம்.

ஒரு சம்பவத்தை எழுத்துருவில் படிப்பதற்கும், காட்சிகளாக திரையில் காண்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கதை படிக்கும் போது நம் கற்பனை திரையில் நாமே காமிரா ஆங்கிளையும், கதாபாத்திர தோற்றங்களையும் முடிவு செய்கிறோம். அதாவது, கதை திரைகதை மட்டுமே மற்றொருவருடையது. நடிகர் நடிகையர், ஒப்பனை, சூழ்நிலை எல்ல்லாம் நாமே சிரிஷ்டிக்கிறோம் . அதனால் மூளைத்திறன் அதிகம் செலவிடப்படுகிறது.
ஆனால் டிவி பார்ப்பது அப்படி இல்லை பார்ப்பது மட்டுமே நமது வேலை. கதையா புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும். இதனால் மூளையின் வேலை முடக்கபடுகிறது. மூளைக்கு சோம்பல் தனம் வந்து விடுகிறது. மூளை மந்தமாக இருக்கிறது என்பது இதனால் தான். மற்ற எல்லா வேலைகளையும் டைரக்டர், காமிராமேன், ஒப்பனையாளர், நடிகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.

டிவி பார்ப்பதை விட புத்தகம் படிப்பதே மேல் என்று பீமேலுக்கும் சொல்கிறேன்!
srikarpagam


மின்சார ஷாக்!


இன்றைய சமீபத்திய பிரச்சினை... மின்சாரம்! மழை மாதிரி எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாது.
மிஸ்டர் பொதுஜனத்திடம் இது பற்றி கேட்ட போது வந்து விழுந்த குமுறல்கள் சில...
1."நான் ஏழு மணிக்கு தான் படுக்கைய விட்டு எந்திரிப்பேன். ஆனா இன்னைக்கு சூழ்நிலையில காலைல அஞ்சு மணிக்கு எந்திரிச்ச தான் வேலைய ஈசியா முடிக்க முடியும். தெரிஞ்சோ தெரியாமலோ இப்போ நாம் காற்று, நீர், உணவு, உடை இருப்பிடம் அடுத்து மின்சாரத்தை முக்கிய பொருளா மாத்திகிட்டோம். பெரும்பாலும் காலையில் மோட்டார் போட்டு தண்ணிய கேன்ல ஏத்தனும். மிக்ஸியில சட்னி வக்கணும்... ஹீடர்ல தண்ணி சுட வச்சு குளிக்கணும். இப்படி மின்சாரத்தை அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சதனால இப்ப கஷ்டமா இருக்கு. இத்தனை மணிக்கு தான் கரண்ட் போகும்னு பேபர்ல போடுறாங்க. ஆனா அதன்படி கரண்ட் கட் பண்றது இல்லை."

2. "கரண்ட் பிரச்சனைய பத்தி அரசியல் கட்சிகளெல்லாம் ஆர்பாட்டம், போராட்டம்னு நிறைய பண்றாங்க... பொது மக்களான நாமளும் களத்தில இறங்கி போராடனும். அரசியல் கட்சிகளை சேர்த்துக்க கூடாது. நாமாவே ஒரு டீம் சேர்ந்து போராடணும்."

3. எலெக்ட்ரிக் பில்லை ஒரு நாள் லேட்டா கட்டினாலே பியுஸ் புடுங்க வந்துடறாங்க. ஆனா கரண்ட் மட்டும் அவங்க இஷ்டத்துக்கு விடறாங்க. பேசாம தமிழ்நாட்டுல இருக்கிற ஓவ்வொரு குடும்பமும் EB பில்ல கரண்ட் ஒழுங்கா விடுற வரைக்கும் கட்ட கூடாது. அப்பத்தான் புத்தி வரும்." என்று ஒருத்தர் பஞ்ச் டயலாக் வைத்தார்.
இல்ல தலைவிகளின் புலம்பல்கள் ஒரு ரகம் என்றால் தொழிலதிபர்கள், கடை முதலாளிகள் உற்பத்தியாளர்கள் ஆஸ்பத்திரிகள் என்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். அடிமட்ட மக்களிலிருந்து மேல்மட்ட மக்கள் வரை பாதிப்பை உண்டாக்கும் இந்த மின்சார தடை சீக்கிரமே ஒரு நல்ல தீர்வுக்கு வந்தால் சந்தோஷம்.
இந்த பிரச்சினையால் ஒருத்தருக்கு நல்ல வாய்ப்பு... திருடர்களுக்கு! அதிலும் செயின் பறிப்புகள் அதிகமாக நடக்கும். பொது மக்களே ஜாக்கிரதை!