விவேகானந்தா தெரு, துபாய்!

துபாய் இப்போது மிகவும் மோசமான பொருளாதார நிலையை கொண்டிருக்கிறது என்பது பத்திரிகை மூலமாக படித்து தெரிந்து கொள்கிறோம். முக்கியமாக வேலை தேடி செல்வோர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வேலையில் இருந்த பலர் வேலை இழப்பை சந்தித்துக் கொண்டும் சிலர் வேலை எப்போது பரி போகுமோ என்று அச்சப்பட்டு கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக சமீபத்தில் துபாய் நண்பர் அனுப்பிய ஈ மெயில் கடிதம் சான்று பகர்கிறது. அது...



பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.
டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

ஒளிந்திருந்து கொல்லும்...


கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சைமட்டுமே உள்ளது என்பதைமறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNSHOPKINS) சொல்கிறார். இங்கேஉங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரணடெஸ்டில் தெரிய வராது, அவைசில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்சிகிச்சைக்குப் பின், டாக்டர்நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையானஅர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்றுமட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கானசெல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாகஇருக்கும்போது கேன்சருக்கான செல்அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கானவாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்துகுறைபாடு (nutritionaldeficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவுமற்றும் வாழ்க்கை முறைகாரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்துகுறைப்பாட்டை நீக்கலாம். தேவையானசத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களைமட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பைபோன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்குடல், கிட்னி, இதயம்,மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமானசெல்கள், உறுப்புகள்,திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்(tumor) அளவைக் குறைக்கசெய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சைகேன்சர் கட்டியினை அழிக்கபெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சுமூலம் நோய் எதிர்ப்புசக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லதுஅழிக்கப் பட்துவிடும். இதனால்மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்மற்ற இடங்களில் பரவ ஒருகாரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளைநாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிகநேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.ஜீரணமாகாத இறைச்சியானதுகுடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவேஇறைச்சி சாப்பிடுவதைதவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனதுசக்தியை கேன்சர் செல்லின்கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killercells) கேன்சர் செல்லைஅழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAsetc, போன்றவைநோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body'sown killer cells) மூலம்கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ளபாதிக்கப்பட்ட, தேவையற்றசெல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements likevitamin E are known tocause apoptosis, or programmed cell death, the body's normal method of disposingof damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)நோயே! நேர்மறையான,ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையைஅளிக்கிறது. கோபம், மன்னிக்கும்மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்அமிலத்தன்மையையும்அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்தசுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.மூச்சுப் பயிற்சியானது(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையைதவிர்ப்பது கேன்சர் செல்லுக்குதவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ளNutraSweet, Equal,Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும்பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றைஎடுத்துக் கொள்ளலாம். TableSalt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாகBragg's amino or sea saltபோன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல்(gastro-intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாகஇனிப்பில்லாத சோயாப் பாலைஎடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமானஉணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவுசிக்கன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள்,ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழுதானியங்கள், விதைகள்,பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில்வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாகஇருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ளநொதிகளை அளிக்கிறது, இவை 15நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளரஉதவுகிறது. ஆரோக்கியமானசெல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ்மற்றும் ஒரு நாளைக்கு 2அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளைதவிர்த்து விடவும். இதற்குமாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர்செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல்உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோககலவை அதிகமுள்ள குழாய் நீரைதவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்

இந்த பயன்மிகு செய்தியை அனுப்பிய திரு. முகமது அப்துல் காதர் அவர்களுக்கு நன்றி!!