உங்கள் மனப்பாங்கு எப்படி...?



மனப்பாங்கு என்று அழைக்கப்படும் வசீகரமான விஷயத்திற்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஆப்டிமிஸம். ஆப்டிமிஸ்ட் என்பவன் யாரென்றால், தன்னுடைய செருப்புகளைக் கழற்றிப் போடும் போது தன்னுடைய சொந்தக் காலுக்குத் திரும்பிவிட்டதாக நினைக்கும் குணாதிசயம் கொண்டவன்.


ஆப்டிமிஸ்ட்டுக்கும் பெஸிமிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை ராபர்ட் ஸ்கூலர் மிக அழகாகச் சுட்டிக்காட்டுவார். "நான் என்னுடைய கண்ணால் பார்த்தால் மட்டுமே ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்வேன்" என்று கூறுபவன் பெஸிமிஸ்ட். "நான் நம்பிக்கை கொண்ட பிறகு தான் பார்ப்பேன்" என்று கூறுபவன் ஆப்டிமிஸ்ட். ஆப்டிமிஸ்ட் செயலில் இறங்குகிறான். பெஸிமிஸ்ட் ஆராய்ச்சியில் இறங்குகிறான். ஒரு கிளாஸில் பாதியளவு தண்ணீரைப் பார்க்கும் ஆப்டிமிஸ்ட் பாதி நிரம்பி இருப்பதாகக் கூறுகிறான். அதே விஷயத்தைப் பார்க்கும் பெஸிமிஸ்ட் பாதி கிளாஸ் காலியாக இருப்பதாகக் கூறுகிறான். இந்த வித்தியாசமான கண்ணோட்டத்திற்கான காரணம் மிகச் சாதரணமானது தான்.


ஆப்டிமிஸ்ட் கிளாஸில் தண்ணீரை ஊற்றுகிறான். பெஸிமிஸ்ட் கிளாஸில் இருந்து தண்ணீரை வெளியே எடுக்கிறான். சமுதாயத்திற்கு எந்த விதப் பங்களிப்பும் செய்வதற்கு எந்த வித உண்மையான முயற்சியும் எடுக்காமல் பெஸிமிஸ்ட்டுகள் இருப்பது சர்வதேச அளவில் உண்மை. இதற்கு என்ன காரணம் என்றால், பிறருக்கு ஏதேனும் கொடுத்து உதவி செய்தால் தனக்கு இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் அவர்களை எப்போதும் ஆட்கொண்டிருக்கும். அதே சமயத்தில் தன்னால் இயன்ற பங்களிப்பை, உதவிகளை இந்தச் சமுதாயத்திற்குச் செய்யும் ஆப்டிமிஸ்ட் மனிதர்கள் மிகுந்த நம்பிக்கையோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.


இதற்கு அடிப்படையான காரணம், ஆப்டிமிஸ்ட்டுகள் எப்போதும் நேரிடையாக ஒரு செயலில் இறங்குவது தான்.


நீங்கள் ஆப்டிமிஸ்டா... பெஸிமிஸ்டா...?

No comments: