சிகரட் பிடிப்பது என்பது தாழ்வு மனப்பான்மையின் அடையாளம் என்று உளவியல் அறிஞர் முரேபேங்க்ஸ் குறிப்பிடுகிறார். நண்பர்கள் கூட்டத்தினால் தான் இந்தப் பழக்கம் ஒருவனுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது. அந்தக் கூட்டத்தில் சம அந்தஸ்து பெறுவதற்காகவும், அதில் ஐக்கியமாவதர்காகவும் தான் சிகரட்டை ஒருவன் முதன் முதலாகத் தொடுகிறான். சிகரட்டை நீங்கள் முதல்முறையாகப் பிடிக்க முயற்சிக்கும்போது உங்கள் மொத்த உடம்பும் அதனை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பித் தடுக்க முயற்சிக்கும். "வேண்டாம், வேண்டாம்" என்று உங்கள் உடம்பு சொல்லிக் கொண்டிருக்கும்போது, "வேண்டும், வேண்டும்" என்று நீங்கள் உறுதியாக நின்று உங்கள் உடம்பை வலுக்கட்டாயமாகச் சம்மதிக்க வைப்பீர்கள். அதன் பிறகு, சிகரட்டை ஸ்டைலாக ஊத்தி, உங்கள் குழுவினர் மத்தியில் ஒரு ஹீரோ போல நடந்து கொள்வீர்கள். அதன் பிறகு வலயம் விடுவது, புகையை மூக்கு வழியாக விடுவது-இப்படி அந்தக் காலையில் ஒரு மாஸ்டர் ஆவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் அந்தஸ்து இதன் மூலம் பெரிய நிலைக்கு உயர்ந்து விட்டதாகக் கர்வப்பட்டு கொள்வீர்கள். ஆனால், உங்கள் கல்லறைக்குச் செல்லும் பாதையில் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்வதில்லை. எந்த அளவிற்கு எளிதாகச் சட்டென இந்தப் பழக்கத்தை நீங்கள் மேற்கொன்டீர்கலாவ் அதே போன்று இந்தப் பழக்கத்தினை உங்களால் எளிதாகச் சட்டென விட்டுவிட முடியுமா?
சிகரட் பிடிக்கும் பழக்கம் டீனேஜ் பருவத்தில்தான் 95% பேருக்கு எஅற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வயதைக் கடந்துவிட்டால், அதன் பிறகு இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
சர, இப்போது இந்தப் பழக்கம் எப்படி வளர்கிறது என்பது குறித்துத் தொடர்ந்து பார்ப்போம். உங்கள் உடம்பு இந்தப் பழக்கத்தைக் கடுமையாக ஆட்சேபித்தாலும் கூட, நீங்கள் விடாமல் வலுக்கட்டாயமாக அதனைத் தொடர்கிறீர்கள். வேறு வழியில்லாமல் உங்கள் உடம்பு அதற்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்கிறது. வேறு வழியின்றி, "சரி, நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது எனக்குப் பிடிக்கவில்லை" என்கிறது உடனே நீங்கள், "ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் " என்கிறீர்கள். சிறிது காலத்தில் உங்கள் உடம்பு மேலும் கொஞ்சம் அசைந்து கொடுத்து "இதற்கு நான் ஏன் எதிப்புத் தெரிவித்தேன் என்று தெரியவில்லை, நான் நினைத்த அளவிற்கு இது ஒன்றும் மோசமில்லை" என்கிறது. அதன் பிறகு உங்கள் உடம்பும் அதனை ரசிக்கத் தொடங்குகிறது. ஆக, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நீங்கள் அந்தப் பழக்கத்தோடு இரண்டறக் கலந்து விடுகிறீர்கள். அதன் பிறகு, "இந்தப் பழக்கத்தை நான் எப்போது வேண்டுமானாலும் விட்டு விட முடியும். ஏனென்றால் இந்தப் பழக்கத்தை நான் ஏற்கனவே பத்து முறைகள் விட்டிருக்கிறேன். இதற்கு எப்போதும் நான் அடிமையாக மாட்ட்டேன்" என்று சொல்வீர்கள். இறுதியாக, உங்கள் உடம்பு, தன் இறுதி அனுசரனையையும் மேற்கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிகரட்டை அதுவே கேட்கத் தொடங்கிவிடும் போது, நீங்கள் சிகரட் என்னும் எஜமானனுக்கு அடிமையாகிவிடுகிறீர்கள்.
(ஒரு புத்தகத்திலிருந்து...)
No comments:
Post a Comment