சுனாமி?



ஜூலை மாதம் ஏழாம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இதே ஜூலை மாதம் வருகிற 22 ம் தேதி சூரிய கிரகணம் வரப் போகிறது. மீண்டும் "ஷ்.. இப்பவே கண்ணா கட்டுதே " என்ற டயலாக்குக்கு ஏற்ப ஆகஸ்ட் 6 ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படப் போகிறது. முப்பது நாட்களுக்குள் மூன்று கிரகணங்கள் நிகழ இருக்கும் இந்த சமயத்தில் 'வரலாறு திரும்புமா' என்ற தலைப்பில் சென்னையை சேர்ந்த டி.கே.ஹரி, ஹேமா ஹரி தம்பதி ஆங்கிலத்தில் இந்த கிரகணத்தை பற்றி எழுதி அதன் பாதிப்புக்களை பற்றி விளக்கியுள்ளனர்.


அவர்கள்," மகாபாரதத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் நடப்பதைக் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார் வியாசர். இதை ஒட்டித்தான் பாரதப்போர் வந்தது. இதன் பிறகு முப்பது ஆண்டுகள் கழித்து கிருஷ்ணரும் ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்களை கண்டார். அதன் பிறகு தான் துவாரகாவை கடகோள் அழித்தது. மேலும் அதே காலத்தில் தான், தென்னகத்தில் குமரிக் கண்டம் அழிந்ததாகவும் இலக்கியங்கள் கூறுகின்றன. பைபிளில் கூட பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, நோவா என்பவர் கப்பல் கட்டி தப்பித்தார் என சொள்ளப்ப்பட்டிருக்கிறது. அந்த பேரழிவும் அதே கிரகண காலத்தில் தன் நடந்திருக்க வேண்டும் " என்று கூறி இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த மூன்று தொடர் கிரகணங்களை பற்றி ஒரு பயத்தை கிளப்பி இப்போது என்ன நடக்க போகிறதோ? என்ற கேள்வியையும் வீசி உள்ளனர்.


அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சுனாமி பீதியையும் கிளப்பி உள்ளனர். வானியலில் நிகழும் சில மாறுதல்களால் சில தீமைகள் ஏற்படும் என்று அரச காலங்களில் ஜோதிடர்கள் கணித்து சொல்லி இருக்கலாம். சில நிகழ்ந்திருக்கலாம் சில நிகழாமலும் இருந்திருக்கலாம். ஆனால் நிகழ்ந்த சம்பவங்களை மட்டும் வரலாற்றில் பதிவு செய்பவர்கள், நிகழாத சம்பவங்களை பதிவு செய்ய தவறி விடுகிறார்கள். அதன் தொடர்ச்சியே இத்தகைய செய்திகளுக்கு காரணம்.


எது எப்படியிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றும் சொல்ல முடியாது. இயற்க்கை நிகழ்வுகளை யாரால் தடுக்க முடியும். இன்றும் மழை வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகளை நாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். இயற்கை சக்திக்கு முன்னே நாம் எம்மாத்திரம்?

No comments: