ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்த வித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால் தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிக்கை செய்தி!
இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்து தான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா? என்று இந்தியர்களாகிய நாம் நினைக்கிறோம். ஏனென்றால் நம் முன்னோர்கள் திருமண விஷயத்தில் வகுத்துக் கொடுத்து சென்ற பாதை அப்படி.
திருமணம் முடிவதற்கு முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துப் பேச அனுமதித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையை பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையே உடலுறவுக்கு வற்புறுத்தினாலும் பெண் அதற்கு சம்மதிக்காமல் "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று வெட்கத்துடன் மறுத்து விடுகின்றனர். திருமணமான பின் ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று இருதரப்பும் அவசரப்படுவதற்கு காரணம் பல இருந்தாலும், அதில் ஒரு காரணமாக பொறுப்புணர்ச்சியும் அமைகிறது.
என்ன முணுமுணுக்கிறிர்கள்?
நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் என்று கேட்கிறீர்களா?
அதெல்லாம் பழங்காலம். இப்போது புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது என்கிறீர்களா?
அதுவும் சரி தான். இந்தியா கம்பியூட்டர் மயமாகி அவுட் சோர்ஸிங் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பின் தற்கால இளைய சமுதாயம் நம்முடைய பழம்பெரும் பண்பாட்டை-ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் கருத்துக் கணிப்பு செய்து ரூம் போட்டு யோசித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவை- மறந்து திருமணத்துக்கு முன்னே உறவு வைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அதிலும் சமீபத்திய பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இப்படி பட்ட செய்திகளை அடிக்கடி வாசிக்கும் பாக்கியம் பெற்றிருப்பார்கள்.
இப்படியே அமெரிக்க பண்பாட்டை பின்பற்றி இந்திய இளைய உள்ளங்கள் செல்ல ஆரம்பித்தால் இன்னும் சில வருடங்களில் இந்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்.
அது...
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அதே விஷயத்தை தான் ஆராய வேண்டியிருக்கும்.

No comments:
Post a Comment