திருநீறு இட்ட நெற்றி பாழ்!

(இந்த கட்டுரைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை. திருநீறு பூசிஇருப்பதால்...)
முன்பெல்லாம் நெற்றியில் பூசும் திருநீறு சுத்தமான சாம்பலால் செய்யப்பட்டிருந்ததால் நெற்றியை பாழ் படுத்தாமல் இருந்தது. "திருநீறு இல்லாத நெற்றி பாழ்" என்று சான்றோர்கள் கூறுவார்கள். ஆனால் இன்று திருநீறு அணிந்தால் தான் நெற்றி பாழ் என்று மாறி விட்டது. அந்த அளவுக்கு விபூதியில் கெமிக்கல் கலந்திருக்கிறது. தொடர்ந்து விபூதி பூசி வரும் பக்தர்கள் நெற்றியில் கருப்பு கோடே விழுந்து விடுகிறது. சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு அந்த இடத்தில் அரித்து தடித்து வீங்கி போய் விடுகிறது.

சுத்தமான சாம்பலால் விபூதி செய்யப்பட்ட காலத்தில் இறைவன் பெயரை சொல்லி நெற்றியில் திருநீறு இடச் சொன்னார்கள். எதற்கு? சாம்பலுக்கு நீரை இழுக்கும் சக்தி உண்டு. தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்த பிறகு நெற்றியில் நீர் கோர்க்க விடாமல் இருப்பதற்காக திருநீறு என்ற சாம்பலை இடச் செய்தார்கள்.

சரி நண்பா... இப்போது எதற்கு இந்த பில்டு-அப்?

நேற்று சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு பக்தர் அய்யர் கொடுத்த விபூதியை கையில் வாங்கி நெற்றியில் பூசி விட்டு மிச்சமிருந்த விபூதியை வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். நான் திகைத்து விட்டேன். விபூதியை விழுங்கி விட வேண்டுமென்று "விபூதி சாஸ்திரம்" ஏதும் இருக்கிறதா என்று நினைத்து கொண்டு அந்த பக்தரிடம் காரணம் கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே,"விபூதியை கீழே சிந்தக் கூடாது . அப்படி சிந்தினால் அது கண்டவர்கள் கால் பட்டு அதன் புனிதம் கேட்டு விடும் என்று ஒரு பெரியவர் கூறினார். அதிலிருந்து நான் வாய்க்குள் போட்டு விழுங்கி விடுகிறேன்." என்றார்.

"அது சரி... விபூதியின் புனிதம் கேட்டு விடக்கூடாது என்று உங்கள் உடம்பை அல்லவா கெடுத்துக் கொள்கிறீர்கள் "என்று சொல்லி விட்டு, முன்பு போல் விபூதி சாம்பலாக இல்லை கேமிக்களாக உள்ளது. என்று விளக்கினேன்.

1 comment:

muruganandam said...

Very Nice Blog.... Lot of Informations....