விவேகானந்தா தெரு, துபாய்!
பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.
டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!
ஒளிந்திருந்து கொல்லும்...
உங்களிடம் கிரெடிட் கார்ட் உள்ளதா...?
எமன் இந்த உருவிலும் வருவான்...
சிகரட் பிடிப்பது என்பது தாழ்வு மனப்பான்மையின் அடையாளம் என்று உளவியல் அறிஞர் முரேபேங்க்ஸ் குறிப்பிடுகிறார். நண்பர்கள் கூட்டத்தினால் தான் இந்தப் பழக்கம் ஒருவனுக்குப் பெரும்பாலும் ஏற்படுகிறது. அந்தக் கூட்டத்தில் சம அந்தஸ்து பெறுவதற்காகவும், அதில் ஐக்கியமாவதர்காகவும் தான் சிகரட்டை ஒருவன் முதன் முதலாகத் தொடுகிறான். சிகரட்டை நீங்கள் முதல்முறையாகப் பிடிக்க முயற்சிக்கும்போது உங்கள் மொத்த உடம்பும் அதனை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பித் தடுக்க முயற்சிக்கும். "வேண்டாம், வேண்டாம்" என்று உங்கள் உடம்பு சொல்லிக் கொண்டிருக்கும்போது, "வேண்டும், வேண்டும்" என்று நீங்கள் உறுதியாக நின்று உங்கள் உடம்பை வலுக்கட்டாயமாகச் சம்மதிக்க வைப்பீர்கள். அதன் பிறகு, சிகரட்டை ஸ்டைலாக ஊத்தி, உங்கள் குழுவினர் மத்தியில் ஒரு ஹீரோ போல நடந்து கொள்வீர்கள். அதன் பிறகு வலயம் விடுவது, புகையை மூக்கு வழியாக விடுவது-இப்படி அந்தக் காலையில் ஒரு மாஸ்டர் ஆவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் அந்தஸ்து இதன் மூலம் பெரிய நிலைக்கு உயர்ந்து விட்டதாகக் கர்வப்பட்டு கொள்வீர்கள். ஆனால், உங்கள் கல்லறைக்குச் செல்லும் பாதையில் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்பதை அப்போது நீங்கள் உணர்வதில்லை. எந்த அளவிற்கு எளிதாகச் சட்டென இந்தப் பழக்கத்தை நீங்கள் மேற்கொன்டீர்கலாவ் அதே போன்று இந்தப் பழக்கத்தினை உங்களால் எளிதாகச் சட்டென விட்டுவிட முடியுமா?
சிகரட் பிடிக்கும் பழக்கம் டீனேஜ் பருவத்தில்தான் 95% பேருக்கு எஅற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வயதைக் கடந்துவிட்டால், அதன் பிறகு இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
சர, இப்போது இந்தப் பழக்கம் எப்படி வளர்கிறது என்பது குறித்துத் தொடர்ந்து பார்ப்போம். உங்கள் உடம்பு இந்தப் பழக்கத்தைக் கடுமையாக ஆட்சேபித்தாலும் கூட, நீங்கள் விடாமல் வலுக்கட்டாயமாக அதனைத் தொடர்கிறீர்கள். வேறு வழியில்லாமல் உங்கள் உடம்பு அதற்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்கிறது. வேறு வழியின்றி, "சரி, நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது எனக்குப் பிடிக்கவில்லை" என்கிறது உடனே நீங்கள், "ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் " என்கிறீர்கள். சிறிது காலத்தில் உங்கள் உடம்பு மேலும் கொஞ்சம் அசைந்து கொடுத்து "இதற்கு நான் ஏன் எதிப்புத் தெரிவித்தேன் என்று தெரியவில்லை, நான் நினைத்த அளவிற்கு இது ஒன்றும் மோசமில்லை" என்கிறது. அதன் பிறகு உங்கள் உடம்பும் அதனை ரசிக்கத் தொடங்குகிறது. ஆக, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நீங்கள் அந்தப் பழக்கத்தோடு இரண்டறக் கலந்து விடுகிறீர்கள். அதன் பிறகு, "இந்தப் பழக்கத்தை நான் எப்போது வேண்டுமானாலும் விட்டு விட முடியும். ஏனென்றால் இந்தப் பழக்கத்தை நான் ஏற்கனவே பத்து முறைகள் விட்டிருக்கிறேன். இதற்கு எப்போதும் நான் அடிமையாக மாட்ட்டேன்" என்று சொல்வீர்கள். இறுதியாக, உங்கள் உடம்பு, தன் இறுதி அனுசரனையையும் மேற்கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிகரட்டை அதுவே கேட்கத் தொடங்கிவிடும் போது, நீங்கள் சிகரட் என்னும் எஜமானனுக்கு அடிமையாகிவிடுகிறீர்கள்.
(ஒரு புத்தகத்திலிருந்து...)
மொபைல் வீடியோ ஜாக்கிரதை!!
திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. திருமணம் செய்துகொள்ளத்தானே போகின்றோம் என்பதால் ஜோடி உல்லாசத்தில் திளைத்தது. பெண்ணுக்கு தெரியாமல் ஆண் அக்காட்சிகளை மொபைலில் பதிவுசெய்து பெண்ணுக்கு அதனை போட்டுக்காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பின்னர் அக்காட்சிகளை அழித்தும் விட்டனர்.
சில நாட்களுக்குப் பின் ஆண் ஒரு படம் பார்க்க நண்பர்களால் அழைக்கப்படுகின்றார். அங்கே சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பார்த்த படத்தில் நாயகர்-நாயகி, இவரும் இவரது ஜோடியும். படம்: இவரும் இவரது ஜோடியும் உல்லாசமாக இருந்ததை பதிவு செய்து பின்னர் அழித்த அதே வீடியோ. பின்னர்தான் தெரிய வந்தது அப்படம் பல காப்பிகள் போடப்பட்டு படுஜோராக அப்பகுதியில் விற்பனை / வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று. அவமானத்தில் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எவ்வாறு CD யானது என துப்பு துலக்கும்போது, ஆண் தன் மொபைலில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை அருகிலுள்ள ஸ்டுடியோவில் ப்ரிண்ட் எடுத்துள்ளார். அச்சமயம் ஸ்டுடியோவினர் ஏற்கனவே இவரது மொபைலில் அழிக்கப்பட்ட வீடியோவை சில சாஃப்ட்வேகளை பயன்படுத்தி திருடி CD யாக்கி விற்பனை / வினியோகம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
திருமண ஆராய்ச்சி!
இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்து தான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா? என்று இந்தியர்களாகிய நாம் நினைக்கிறோம். ஏனென்றால் நம் முன்னோர்கள் திருமண விஷயத்தில் வகுத்துக் கொடுத்து சென்ற பாதை அப்படி.
திருமணம் முடிவதற்கு முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துப் பேச அனுமதித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையை பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையே உடலுறவுக்கு வற்புறுத்தினாலும் பெண் அதற்கு சம்மதிக்காமல் "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று வெட்கத்துடன் மறுத்து விடுகின்றனர். திருமணமான பின் ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று இருதரப்பும் அவசரப்படுவதற்கு காரணம் பல இருந்தாலும், அதில் ஒரு காரணமாக பொறுப்புணர்ச்சியும் அமைகிறது.
என்ன முணுமுணுக்கிறிர்கள்?
நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் என்று கேட்கிறீர்களா?
அதெல்லாம் பழங்காலம். இப்போது புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது என்கிறீர்களா?
அதுவும் சரி தான். இந்தியா கம்பியூட்டர் மயமாகி அவுட் சோர்ஸிங் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பின் தற்கால இளைய சமுதாயம் நம்முடைய பழம்பெரும் பண்பாட்டை-ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் கருத்துக் கணிப்பு செய்து ரூம் போட்டு யோசித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவை- மறந்து திருமணத்துக்கு முன்னே உறவு வைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அதிலும் சமீபத்திய பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இப்படி பட்ட செய்திகளை அடிக்கடி வாசிக்கும் பாக்கியம் பெற்றிருப்பார்கள்.
இப்படியே அமெரிக்க பண்பாட்டை பின்பற்றி இந்திய இளைய உள்ளங்கள் செல்ல ஆரம்பித்தால் இன்னும் சில வருடங்களில் இந்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்.
அது...
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அதே விஷயத்தை தான் ஆராய வேண்டியிருக்கும்.
மொபைலில் தமிழ் இணையதளம்!
மொபைல் போனில் தமிழ் தளங்களைப் பார்ப்பதில் எழுத்துரு பிரச்சனை இருக்கிறதா? தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழத்துக்கள் சரியாகத் தெரியவில்லையா? உங்களுக்குத்தான் இந்தக் மெஸ்ஸேஜ்.
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
உங்கள் சிந்தைனைக்கு...
திருநீறு இட்ட நெற்றி பாழ்!
சுனாமி?
ஜூலை மாதம் ஏழாம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இதே ஜூலை மாதம் வருகிற 22 ம் தேதி சூரிய கிரகணம் வரப் போகிறது. மீண்டும் "ஷ்.. இப்பவே கண்ணா கட்டுதே " என்ற டயலாக்குக்கு ஏற்ப ஆகஸ்ட் 6 ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படப் போகிறது. முப்பது நாட்களுக்குள் மூன்று கிரகணங்கள் நிகழ இருக்கும் இந்த சமயத்தில் 'வரலாறு திரும்புமா' என்ற தலைப்பில் சென்னையை சேர்ந்த டி.கே.ஹரி, ஹேமா ஹரி தம்பதி ஆங்கிலத்தில் இந்த கிரகணத்தை பற்றி எழுதி அதன் பாதிப்புக்களை பற்றி விளக்கியுள்ளனர்.
அவர்கள்," மகாபாரதத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் நடப்பதைக் கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார் வியாசர். இதை ஒட்டித்தான் பாரதப்போர் வந்தது. இதன் பிறகு முப்பது ஆண்டுகள் கழித்து கிருஷ்ணரும் ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்களை கண்டார். அதன் பிறகு தான் துவாரகாவை கடகோள் அழித்தது. மேலும் அதே காலத்தில் தான், தென்னகத்தில் குமரிக் கண்டம் அழிந்ததாகவும் இலக்கியங்கள் கூறுகின்றன. பைபிளில் கூட பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது, நோவா என்பவர் கப்பல் கட்டி தப்பித்தார் என சொள்ளப்ப்பட்டிருக்கிறது. அந்த பேரழிவும் அதே கிரகண காலத்தில் தன் நடந்திருக்க வேண்டும் " என்று கூறி இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த மூன்று தொடர் கிரகணங்களை பற்றி ஒரு பயத்தை கிளப்பி இப்போது என்ன நடக்க போகிறதோ? என்ற கேள்வியையும் வீசி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சுனாமி பீதியையும் கிளப்பி உள்ளனர். வானியலில் நிகழும் சில மாறுதல்களால் சில தீமைகள் ஏற்படும் என்று அரச காலங்களில் ஜோதிடர்கள் கணித்து சொல்லி இருக்கலாம். சில நிகழ்ந்திருக்கலாம் சில நிகழாமலும் இருந்திருக்கலாம். ஆனால் நிகழ்ந்த சம்பவங்களை மட்டும் வரலாற்றில் பதிவு செய்பவர்கள், நிகழாத சம்பவங்களை பதிவு செய்ய தவறி விடுகிறார்கள். அதன் தொடர்ச்சியே இத்தகைய செய்திகளுக்கு காரணம்.
எது எப்படியிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்றும் சொல்ல முடியாது. இயற்க்கை நிகழ்வுகளை யாரால் தடுக்க முடியும். இன்றும் மழை வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகளை நாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். இயற்கை சக்திக்கு முன்னே நாம் எம்மாத்திரம்?
பிரௌசிங் ப்ரொடக்சன் - 30
1. ஆன்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2. ஆன்டி ஸ்பைவேர்: ஒன்று அல்லது இரண்டு ஆன்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆன்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.
3. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இது தரப்படுகிறது. மற்றவர்கள் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.
4. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆன்டி வைரஸ் புரோகிராமும்.
5. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது.
6. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
7. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆன்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் scan@virustotal. com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.
8. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.
9. விண்டோஸ் இயக்கத்தின் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.
10. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்
11. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub. com என்ற தளத்தை அணுகவும்.
12. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
13. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.
14. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம்.
15. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.
16.பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.
17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.
18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.
19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.
20. ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.
21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.
22. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.
23. முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையைஇன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களையும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆன்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்துவிடுவதால் அத்தொகுப்புகளை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
24. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ்தொகுப்பில் தரப்பட்டுள்ளன.
25. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.
26. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.
27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஈ-மெயில் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.
28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக் கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது
நன்றி: திரு கார்த்திக் அவர்களுக்கும் இதை அனுப்பி உதவிய திரு. அஹமது இமாம் அவர்களுக்கும்
சிக 'ரெட்'
தமிழ் பேச்சு வழக்கு!
"நான் சொன்னதை வாங்கிட்டு வரலைன்னா... விளக்குமாறு பிஞ்சிடும்! என்று மனைவி கணவனிடம் சொல்வதை கேட்கும் வெள்ளைக்காரர் குழம்பி போவார். மனைவி சொன்னதை கணவர் வாங்கி வரவில்லையென்றால் எப்படி விளக்குமாறு பிஞ்சு போகும் என்று திணறி போவார். ஆனால் அவருக்கு தெரியாது கணவரை விளக்குமாறை வைத்து அடிக்கிற அடியில பிஞ்சு போகும் என்ற கருத்து தொக்கி நிற்பது அவருக்கு தெரியாது. இது போல் தமிழ் பேச்சு வழக்கு நிறைய இருக்கிறது."
உங்கள் மனப்பாங்கு எப்படி...?
மனப்பாங்கு என்று அழைக்கப்படும் வசீகரமான விஷயத்திற்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஆப்டிமிஸம். ஆப்டிமிஸ்ட் என்பவன் யாரென்றால், தன்னுடைய செருப்புகளைக் கழற்றிப் போடும் போது தன்னுடைய சொந்தக் காலுக்குத் திரும்பிவிட்டதாக நினைக்கும் குணாதிசயம் கொண்டவன்.
ஆப்டிமிஸ்ட்டுக்கும் பெஸிமிஸ்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை ராபர்ட் ஸ்கூலர் மிக அழகாகச் சுட்டிக்காட்டுவார். "நான் என்னுடைய கண்ணால் பார்த்தால் மட்டுமே ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை கொள்வேன்" என்று கூறுபவன் பெஸிமிஸ்ட். "நான் நம்பிக்கை கொண்ட பிறகு தான் பார்ப்பேன்" என்று கூறுபவன் ஆப்டிமிஸ்ட். ஆப்டிமிஸ்ட் செயலில் இறங்குகிறான். பெஸிமிஸ்ட் ஆராய்ச்சியில் இறங்குகிறான். ஒரு கிளாஸில் பாதியளவு தண்ணீரைப் பார்க்கும் ஆப்டிமிஸ்ட் பாதி நிரம்பி இருப்பதாகக் கூறுகிறான். அதே விஷயத்தைப் பார்க்கும் பெஸிமிஸ்ட் பாதி கிளாஸ் காலியாக இருப்பதாகக் கூறுகிறான். இந்த வித்தியாசமான கண்ணோட்டத்திற்கான காரணம் மிகச் சாதரணமானது தான்.
ஆப்டிமிஸ்ட் கிளாஸில் தண்ணீரை ஊற்றுகிறான். பெஸிமிஸ்ட் கிளாஸில் இருந்து தண்ணீரை வெளியே எடுக்கிறான். சமுதாயத்திற்கு எந்த விதப் பங்களிப்பும் செய்வதற்கு எந்த வித உண்மையான முயற்சியும் எடுக்காமல் பெஸிமிஸ்ட்டுகள் இருப்பது சர்வதேச அளவில் உண்மை. இதற்கு என்ன காரணம் என்றால், பிறருக்கு ஏதேனும் கொடுத்து உதவி செய்தால் தனக்கு இல்லாமல் போய் விடுமோ என்கிற அச்சம் அவர்களை எப்போதும் ஆட்கொண்டிருக்கும். அதே சமயத்தில் தன்னால் இயன்ற பங்களிப்பை, உதவிகளை இந்தச் சமுதாயத்திற்குச் செய்யும் ஆப்டிமிஸ்ட் மனிதர்கள் மிகுந்த நம்பிக்கையோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இதற்கு அடிப்படையான காரணம், ஆப்டிமிஸ்ட்டுகள் எப்போதும் நேரிடையாக ஒரு செயலில் இறங்குவது தான்.
நீங்கள் ஆப்டிமிஸ்டா... பெஸிமிஸ்டா...?
நீக்ரோ பலூன்...
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க் நகரத்தில் ஒரு பலூன் வியாபாரி பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு பலூன் வியாபாரம் சற்றே மந்தமாகும்போது உடனே ஒரு பலூனை அவிழ்த்து விடுவார். அந்த பலூன் வானில் பறக்கும் போது புதியதாக ஒரு கூட்டத்தை அது ஈர்க்கும். பழையபடி சில நிமிடங்களில் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கும்.
அவர் வெவ்வேறு நிற பல்லோங்களையும் அவிழ்த்து விடுவார். முதலில் வெண்மை நிற பலூனை, அடுத்து சிகப்பு நிற பலூனை, அடுத்ததாக மஞ்சள் நிற பலூனை இப்படி மாற்றி மாற்றி அவிழ்த்து விடுவார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஒரு நீக்ரோ பையன், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த வியாபாரியின் கண்களைப் பார்த்து ஒரு கூர்மையான கேள்வியைக் கேட்டான். "ஐயா, நீங்கள் அந்த கருப்பு நிற பலூனை அவிழ்த்து விட்டாலும் கூட அது மேலே பறந்து போகுமா?" என்று கேட்டான்.
அந்த பலூன் வியாபாரி நீக்ரோ சிறுவனை மிகவும் கருணையோடு பார்த்து விட்டு அவனுடைய புத்திசாலித்தனமான கேள்வியை புரிந்து கொண்டவராக சொன்னார்: "மகனே, அந்த பலூங்களுக்குள் என்ன இருக்கிறதோ அது தான் பலூன்கள் மேலே பறப்பதற்கான காரணம்."
ஏர்போர்ட் கார்டு!
நடைமுறைக்கு சவூதி சர்வதேச விமான முனைமம் விரைவில் தீர்வுகாண உள்ளது. பயணிகளின் கைரேகை, கண்ரேகை மற்றும் இதர அடையாளங்களைக் கொண்ட தகவல் அடங்கிய விரைவு வெளியேற்ற மின்னணு வாசல்களில் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளால் உடனடியாக ஏர்போர்ட்டிலிருந்து வெளியேற/ உள்வர முடியும். பயணிகள் இத்தகைய அட்டைகளை விமானநிலையச் சிறப்பு வாசல்களில் பொருத்தப்பட்ட இயந்திரத்தில் காட்டி அதிவேகமாக தங்கள் குடியேற்ற நடைமுறைகளை முடித்துச் செல்லலாம்.சவூதி உள்துறைஅமைச்சின் அறிவுறுத்தலின்படி உள்நாட்டு / வெளிநாடுக் குடிமக்களின் சுயவிபரங்களைக் கணினி மயமாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் குற்றவியல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒருபகுதியே இந்த விரைவு ஈ-கேட் அட்டை.தற்போது சவூதி ஏர்போர்ட் மற்றும் குடியேற்ற அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல்களே புழக்கத்தில் உள்ளது. பயோமெட்ரிக் அட்டைமூலம் குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். சவூதி உள்துறை அமைச்சக வட்டாரத் தகவலின்படி,பயோமெட்ரிக் அட்டை உயர்தர தொழில்நுட்பம் கொண்டதாகும்.இதன்மூலம் குறிப்பிட்டத் தகவல் தேடும்பணி ஓரிரு நொடிகளில் கிடைத்துவிடும் என்றார் சவூத் அல் கஹ்தானி என்ற அமைச்சகப் பணியாளர்.பிரத்யேக மின்னணு வாசலைக் கடக்கும் பயணிகள்,தங்கள் குடியேற்ற/வெளியேற்ற விபரம் அடங்கிய அறிக்கையைப் பெறுவார்கள். இந்த புதிய சிஸ்டம் மூலமாக சுமார் 2000 கைரேகைகளைப் பதிவு செய்யும் சாதங்களையும் கையடக்க கைரேகை சாதனங்களையும் இணைத்துச் செயல்படும் என்றார். இதுபோன்ற ஐரிஸ் கண்ரேகை கேமராவில் பதிவு செய்யப்பட்ட விரைவு ஈ-கேட் அட்டைகள் துபாயில் கடந்த நான்காண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அன்புக்கு நான் அடிமை இல்லை!!
அவர்கள் புதிதாக மணமான தம்பதிகள். மாப்பிள்ளைக்கு தந்தை இல்லை. அண்ணன் மட்டுமே. சிறு வயதிலேயே தந்தையை இழந்த தம்பிக்கு அண்ணன் தான் எல்லாமே. அண்ணனுக்கும் மணமாகி விட்டது. ஆனாலும் தம்பி மேல் உள்ள பாசம் குறையவில்லை. அண்ணியும் நல்ல பெண்ணாக இருந்ததால் அண்ணன் தம்பிக்கு இடையில் பிளவு ஏற்படுத்தாமல் வாழ்க்கை நடத்தினாள். புதிதாக வந்த தம்பி மனைவி வந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு மட்டுமே உரித்தான கணவனின் அன்பு அண்ணனுக்கும் பிரிந்து போவதை சகிக்க முடியவில்லை. இதனால் கணவன் மனைவிக்கிடையில் தினசரி சண்டை சச்சரவு. கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு செல்லும் மனைவி... என்று குடும்ப வாழ்க்கையே நரகமாக மாறிக்கொண்டு வந்தது.
அண்ணன்காரன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்தவன், தனியே பிரிந்து சென்று வேறு ஒரு வீட்டில் வாழ ஆரம்பித்தான். தன்னால் கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு வர வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தம்பியிடம் பேச்சை குறைத்துக் கொண்டான். தன் தம்பியிடம் அன்பு காட்டக் கூட முடியவில்லையே என்ற வருத்தம் வெகு நாட்களுக்கு அண்ணன் மனதை அறுத்துக் கொண்டே இருந்தது. முடிவில் அண்ணனுக்கு சக்கரையும், ரத்த அழுத்தமும் வந்தது தான் மிச்சம்.
அன்பை காட்டக்கூடாது என்று தடை வருவதே மிகப்பெரிய தண்டனை தான். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் புரியும். கணவனுக்கு மனைவி தடா போடுவது மட்டுமல்ல... மனைவிக்கு கணவனும் தடா போடுவது நடக்கத் தான் செய்கிறது. சில கணவன்மார்கள் மனைவி வழி சொந்தத்திடம் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று தடை விதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் இப்படி நடந்து கொள்ள காரணம்... பணம் தான்.
அன்பைக் காட்டி அண்ணன்காரன் தம்பியிடம் பணத்தை பிடுங்கி கொள்வானோ என்று புதிதாக வந்த மருமகளுக்கு தோன்றும். அண்ணன் தம்பி அன்பு மாசு மருவற்றது என்பது, பாவம் புதிதாக வந்த மருமகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கண்ணோட்டம் அப்படி. தன் மனைவி வீட்டார்களிடம் அதிகம் பழக்கம் வைத்துக் கொண்டால் தன் மனைவியே தனக்குத் தெரியாமல் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்து விடுவாளோ என்று கணவன் நினைப்பதும் சகஜம் தான். ஆனால் அதற்காக பிறந்த வீட்டு உறவுகளிடம் பேசக் கூடாது என்று தடை போடுவதும் எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
உலகத்தில் தன் மேல் அன்பு காட்டுவதற்கு ஆட்கள் இல்லை. அது போல், தான் அன்பு காட்டுவதற்கு சிறந்த நபர்கள் இல்லை என்ற நிலை உள்ள மனிதன் சிறிது நாட்களிலேயே பைத்தியக்காரன் ஆகி விடுவான்.
ஒரு வாலிபன் தன் வயதுக்கு சம்மான ஒரு இளம்பெண்ணிடம் அன்பு வைத்து அது தீவிரமானால் அதுவே காதலாக மாறுகிறது. அதுவே பெற்றோர்கள் தன் மகனிடமோ அல்லது மகளிடமோ தீவிரமான அன்பை காட்டும் போது அதுவே செல்லமாக மாறுகிறது. பெற்றோர்கள் மகனிடம் அன்பை காட்டி தன் மகனிடமே அடிமையாக மாறுகிறார்கள். அவன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். அவன் மனம் கோணக்கூடாது என்று அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இப்படி செய்யும் பெற்றோர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். செல்லமாக வளர்க்கப்படும் குழந்தை எதிர்காலத்தில் பயந்தாங்கொள்ளிகளாக மாறுகிறது. அல்லது பிடிவாதக்காரர்களாக மாறுகிறது. வயதுகேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களால் சட்டென்று மாற முடிவதில்லை. தன் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு செல்வதற்கு கூட இந்த வழியில் செல்லலாமா அல்லது அந்த வழியில் செல்லலாமா என்று முடிவெடுப்பதில் கூட குழம்புகிறது. பிறகு எங்கே வாழ்க்கையில் பெரிய முடிவுகள் எடுப்பதில் குழம்பாமல் இருக்கும்?
ஆகவே அளவாக அன்பு காட்டுங்கள் வளமான வாழ்வை கொடுங்கள்.
வாழ்க்கையை ப்ராக்டிக்கலாக எடுத்துக் கொண்டால் எல்லாமே ஈஸி தான். தியரிக்கலாக எடுத்துக் கொண்டு செண்டிமெண்டாக வாழ்ந்தால் கஷ்டம் தான். அன்புக்கு அடிமையாக வேண்டாம். அன்பைக் காட்டுங்கள்... ஆனால் அடிமையாக மாற வேண்டாம்.
செண்டிமெண்ட்...
மாலை ஐந்து மணி!
அன்னை கிளினிக் பேஷன்ட்டுகளால் நிரம்பி வழிந்தது. தன்னுடைய கேபினில் அமர்ந்திருந்த டாக்டர் சோமசந்தர் அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்ட்டை வரச்சொன்னார். உள்ளே நுழைந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண். நெற்றி நிறைய விபூதி அணிந்து பக்தி பழமாக காட்சியளித்தார். டாக்டர் அவரை அமரச்சொல்லி விட்டு ரிப்போர்ட்டை பார்த்தார்.
"சுகர் வந்திருக்கும்மா... சுகர் டேப்லெட் சாப்பிடணும்..." என்றார்.
"பாழாப்போன சுகர் எனக்கு வர வாய்ப்பில்லை டாக்டர். எங்க பரம்பரையிலேயே சுகர் கிடையாது. எனக்கு எப்படி வந்திருக்கும்"
"அம்மா... சுகர் வர்றதுக்கு பரம்பரையும் ஒரு காரணம்தான். ஆனா இப்ப வர்ற சுகர் எல்லாம் நாம வாழும் முறையை வைத்தும் வருதும்மா... "
"வாழும் முறைன்னா என்ன டாக்டர்?"
"முன்னே அம்மியில அரைச்சீங்க. இப்ப மிக்ஸியில அரைக்கிறீங்க! முன்னே ஆட்டுக்கல்லுல மாவாட்டினீங்க. இப்ப கிரைண்டர் அரைக்குது! முன்னே துணியை நீங்க துவைச்சீங்க. இப்ப மிஷின் துவைக்குது! இப்படி எல்லா வேலையும் மிஷின் பார்க்கிறதால உங்க உடம்புல இருக்கிற மிஷினை உபயோகப்படுத்தாம கெட்டுப் போச்சு, அதான்." என்றவர், அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு கடவுள் பக்தி அதிகமாக இருப்பவர் என்ற முடிவுக்கு வந்த பின், "நான் டேப்லெட் எழுதித் தர்றேன். அதை காலையில அரை மாத்திரை சாயங்காலம் அரை மாத்திரை சாப்பிடுங்க. சத்து மாத்திரையும் எழுதித் தர்றேன். அதை இரவு சாப்பிடுங்க. சர்க்கரையை ஒதுக்கிடுங்க. காப்பி டீ எல்லாத்திலும் சர்க்கரை சேர்க்க கூடாது. டெய்லி காலைல பழநி மலையை ஒரு சுத்து சுத்தி முருகனை கீழிருந்தே கும்பிட்டுட்டு வாங்க. அந்த முருகப்பெருமான் ரெண்டு மாசத்திலேயே நல்ல பலன் கொடுப்பார். அப்புறம் இங்க வாங்க மாத்திரையை குறைச்சுக்கலாம்" என்றார். அந்த அம்மாவும் சரியென்று சொல்லி விட்டு வெளியேறினார்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து...
அன்று வழக்கம் போல் டாக்டர் சோமசந்தர் தன் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்டை வரச் சொன்னார். அந்த சர்க்கரை வியாதி அம்மாவை கைத்தாங்கலாக ஒரு பெண் அழைத்து வந்தார்.
"ஏம்மா... என்னம்மா ஆச்சு?" என்று டாக்டர் கேட்டார்.
"தலை சுத்துதாம்..." என்றாள் அந்தப் பெண். உடனே வயதான அம்மாவுக்கு உடனடி சர்க்கரை பரிசோதனை நடத்தப்பட்டது. ரிசல்ட் சென்ற முறையை காட்டிலும் 50 பாய்ண்ட் அதிகமாக காண்பித்தது. வயதான அம்மாவை சற்று ஆசுவாசப்படுத்தி விட்டு, "எப்படிம்மா இப்படி ஆச்சு?"
வயதான அம்மா மெதுவாக பேச ஆரம்பித்தார். "டாக்டர்... நீங்க சொன்ன படி எல்லாம் செஞ்சேன். ஆனா அந்த முருகப்பெருமான் மனசு வைக்கலியே. சர்க்கரையை கண்ணுல கூட பார்க்கறது இல்ல! மலையை சுத்தி சாமி கும்பிட்டேன். அதுக்கு பலன்தான் இது!" என்றார். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு...
ஒவ்வொரு கேள்வியாக கேட்டார்.
"காலையில எழுந்ததும் என்ன செய்வீங்க?"
"பல்ல விலக்கி சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பேன்"
"அப்புறம்?"
"நெற்றியில விபூதி பூசிட்டு நடக்க ஆரம்பிப்பேன். பக்கத்திலதான் மலை இருக்கு. அதனால கிரிவல பாதையில நடந்து ஒரு சுத்து சுத்தி முன் பக்கமா வந்து சாமியை கும்பிட்டு வருவேன்"
"அப்புறம்?"
"அப்புறம்... ஆங்... சித்தனாதன் கடையில ஒரு சின்ன பஞ்சாமிர்த டப்பா வாங்கி முருகனை மனசுல நினைச்சு சாப்பிடுவேன்"
டாக்டர் திகைத்து விட்டார். "சரியாப் போச்சு! உங்களை சாமியை கும்பிட்டுட்டு தானே வரச்சொன்னேன்... பஞ்சாமிர்தம் வாங்கி சாப்பிட சொன்னேனா?"
"அதுக்கில்ல டாக்டர்.. சாமி பிரசாதம் சாப்பிட்டா சீக்கிரம் குணமாகிடும்னு..." என்று இழுத்தார்.
டாக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.
தங்கப் புலம்பல்...
"எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல, டவுனு பக்கம் போயி பங்குச்சந்தையில வேல பார்க்கிறவரு இருக்காரு... அவரு நேத்து ஒரு விசயம் சொன்னாரு. அதாவது 'தங்கம் ரேட்டு சீக்கிரமே ரூபாய் ரெண்டாயிரத்தை தொட்டுடும். அதனால ஒம்பொண்ணுக்கு இப்பவே பவுனு சேர்க்க ஆரம்பி' அப்படின்னாரு. எம்பொண்ணுக்கு இப்பத்தான் ரெண்டு வயசு ஆகுது. இவரு சொல்லறத பார்த்தா எம்பொண்ணு கல்யாண வயசுல கிராம் அஞ்சாயிரத்தை தொட்டுடும் போல. கொஞ்ச நாளைக்கு முன்னால கிராம் விலை சீக்கிரமே இறங்கி எட்டுநூறு ரூபாய்க்கு வந்துடும்... அமெரிக்காவில பேங்கெல்லாம் திவாலா ஆயிடுச்சு. அவங்க நஷ்டத்தை சரி கட்டறதுக்கு கையில வச்சிருக்கிற தங்கத்தையெல்லாம் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப தங்கம் விலை குறையும்னு சொன்னாங்க. அது போக இந்தோனேசியாவோ தாய்லாந்தோ ஏதோ ஒரு நாட்டை சொல்லி அங்கே இருக்கிற தங்கச்சுரங்கத்தில வேலை பார்க்கிறவுங்க ஸ்ட்ரைக் பண்றதால தங்க உற்பத்தி குறைஞ்சிருக்கு. அவங்க ஸ்ட்ரைக்கை வாபஸ் பண்ணிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சா தங்கம் ரேட் குறையும்னு சொன்னாங்க. நான் அரைப்பவுன் தோடு வாங்கப் போனவன் இதை கேட்டு கொஞ்ச நாள் பொறுத்து வாங்கிக்கலாம்னு இருந்துட்டேன். அன்னைக்கி விலை ஒரு கிராம் ஆயிரத்தி அம்பது ரூபாய். இன்னைக்கி ரேட் ஒரு கிராம் ஆயிரத்தி முன்னூறு ஆயிடுச்சு. இருநூற்றி அம்பது ரூபாய் குறையும்னு பார்த்தா ஏறிடுச்சு. எங்களை மாதிரி கூலி வேலை செய்யிறவுங்க கொஞ்சம் கொஞ்சமா பவுனு சேர்க்கலாம்னு பார்த்தா அதையும் சரியா செய்ய விட மாட்டீங்கிறீங்க. இப்படித்தான் பங்குச்சந்தை டாப்புல இருக்கிறப்ப டெக்னிக்கலாச் சொல்றேன், ஆடிட்டிங்க வச்சு சொல்றேன்னு சொல்லி சொல்லியே இருக்கிறவன் பணத்தையெல்லாம் போடச்சொன்னீங்க. இப்ப என்ன ஆச்சு? பணம் போட்டவனெல்லாம் தலையில கைய வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கான். அந்த சமயத்துல இடத்தை வித்து பணத்தை போட்டவனும் இருக்கான். இப்ப தங்கம் விலை ஏறறதுக்கு ஒரு காரணமா இந்த பங்குச்சந்தை நொடிச்சுப் போனதை காரணமா சொல்றாங்க. பங்குச்சந்தையும் ரியல் எஸ்டேட் தொழிலும் சரியா இல்லாத்தாலதான் எல்லோரும் தங்கம் வாங்கி வைக்கிறாங்க. அதனாலதான் ரேட் ஏறுதுங்கிறாங்க. இப்ப எனக்கு ஜோசியம் சொல்றவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு. ஏன்னா அவர்தான் நடந்து போன விஷயத்தை பளிச்சுன்னு சொல்லி அதுக்கு என்ன காரணம்னு கரெக்டா சொல்வாரு. இனி நடக்க போற விஷயத்தை வானிலை அறிக்கை மாதிரி மழை வந்தாலும் வரும் வராட்டியும் இல்லங்கிற மாதிரி சொல்வாரு. அப்படி ஆயிடுச்சு கதை.
சரி, எம்பொண்ணுக்கு பவுனு எப்படி சேர்க்கிறதுன்னு ஒரு அனுபவஸ்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னாரு... 'நகை சீட்டு போட்டுடாத. நகை சீட்டு போட்டின்னா நகைக்கடைக்காரனுக்குதான் லாபம். உனக்கு லாபமில்லை. அதனால ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி ஒரு கிராம் தங்கக் காசு வாங்கி சேர்த்து வச்சுக்க. இதை ஒரு கடமையாச் செய்யணும். ஒரு வருசத்துல ஆறு கிராம் சேர்ந்துடும். பத்து வருஷத்துக்கு அறுபது கிராம் சேர்ந்துடும். நீ வாங்கும் போது அன்னைக்கி ரேட் என்னவாயிருந்தாலும் சரி... வாங்கி வச்சுடு' அப்படின்னாரு. அதுக்கு பேரு என்னவோ சொன்னாரு. (Systematic Investment Plan) பத்து வருசத்துல அறுபது கிராம்-னா கிட்டத்தட்ட ஏழு பவுனாச்சே!! அவரு சொல்ற யோசனையும் நல்லாத்தான் இருக்கு. செஞ்சு பார்ப்போம்..."
நன்றி: அதிகாலை
பணம் பத்தும் செய்யுமா?
சாதாரண இந்தியக் குடிமகனின் இன்றைய பிரச்சனை பெட்ரோல்! லாரி உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை வைத்து போராடுகிறார்கள்... இந்திய எண்ணை நிறுவன ஊழியர்கள் அவர்கள் பங்குக்கு சில கோரிக்கைகள் வைத்துப் போராடுகிறார்கள்... அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இடையே 'பெட்ரோல் டீசல்' விலையை குறைக்கச் சொல்லி ஒரு பொதுப் பிரச்சனையையும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையையும் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்த பிறகு லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை குறைப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை. இந்த நிமிடம் சாதாரண இந்தியக்குடிமகனின் பிரச்சனை அதுவல்ல. அன்றாட வேலைகளையும், கடமைகளையும் செய்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக்கூட டூ-வீலரை உபயோகப்படுத்தி பழகி விட்டார்கள். இன்றைய நிலைமையில் நடுத்தர மக்கள் என்றால் டூ-வீலரையும், கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்றால் கார்களையும் நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். சைக்கிளில் செல்வதற்கு கவுரவம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். "யாரு நம்ம சரவணனா... ஹோண்டா சைன்ல வருவாரே... அவர் தானே?" என்று ட்ரேட் மார்க் ஆக்கி விட்டார்கள்.
ஆகையால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்பது பேரிடியாகவே இருக்கிறது.
ஒவ்வொரு நகர பெட்ரோல் பங்குகளில் க்யூ வரிசையில் மணிக்கணக்காக நின்று பெட்ரோல் வாங்கிச் செல்லும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
இன்று நாம் அனைவரும் பணம், பணம் என்று பணத்தை துரத்தி செல்லும் தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். உணவு உற்பத்தித் தொழிலான உழவுத்தொழில் பக்கம் நம் இளைய தலைமுறையை செல்ல விடுவதில்லை. ஏனென்றால் அது லாபமற்ற தொழில். நம் தேவையை போல் மூன்று மடங்கு உணவு உற்பத்தி இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அதே நேரத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் 'இப்படியே சென்றால் உணவு உற்பத்தி குறைந்து போய், மக்களிடம் பணம் நிறைய இருந்தும் உணவு வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் ஆபத்து இருக்கிறது' என்றும் கலவரப்படுத்துகிறார்கள்.
பெட்ரோல் பங்குகளில் கூட்டத்தை பார்க்கும் போது பெட்ரோலுக்கு பதிலாக உணவுப்பொருளை வைத்து கற்பனை ஓடுகிறது. அது மாதிரி நிலையை உருவாக்காமல் இருப்பது நம் அனைவரின் கடமை அல்லவா?